தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா?
தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் 270 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 9 மில்லியன் மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 35%மும் நகர்ப்புறங்களில் 27%மும் வறுமை குறைந்துள்ளது. இது அகில இந்திய வறுமை நிலையைவிட 10% குறைவாக உள்ளது.
வறுமையை குறைக்க இந்திய மற்றும் தமிழக அரசு எப்படி உதவியது? மக்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது? சேவை துறை வருமானம் 19% அதிகரித்ததினால், வறுமை குறைந்தது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விவசாயத்தில் 16% வருமானம் குறைந்துள்ளது. விவசாயத்துறையில் எதனால் இந்த குறைவு?
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாம் உழைப்பதினால் வறுமை குறைந்துள்ளது என ஒரு சிலர் வாதிட்டாலும், விவசாயத்தில் நமது குறிக்கோள் என்ன? சுயதொழில் செய்வோர் சதவிகிதம் குறைந்துள்ளது, சம்பளத்திற்கு வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பார்த்தால் தமிழகம் ஒரு கூலிகள் வாழும் நிலமாக மாறுகிறதோ என எண்ணதோணுகிறது.
தலைப்பு படம் : By Ankita Gkd [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
References:
- Kumar, N. S., & Shankar, R. POVERTY REDUCTION THROUGH MICROFINANCE–AN EMPIRICAL STUDY OF SHGS IN TAMILNADU.
- Bavinck, M. (2011). Wealth, poverty, and immigration: The role of institutions in the fisheries of Tamil Nadu, India. In Poverty mosaics: realities and prospects in small-scale fisheries (pp. 173-191). Springer, Dordrecht.
- Sheriff, D. S., & Periyar, T. Addressing hunger in Tamilnadu.