NEET தேர்வு இந்தியாவிற்கு தேவையா? Prometric என்ற அமெரிக்க நிறுவனதின் பல கோடி Deal!
NEET தேர்வு இந்தியாவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வாகும். இது போல அமெரிக்காவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வு MCAT என அழைக்கப்படுகிறது.
இந்த இரு நாடுகளிலும் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வு மதிப்பெண்கள் மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற பல நுழைவு குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுழைவு குறியீடுகளில் சில: உயிரியல் வேதியியல் இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களின் GPA மதிப்பெண், சமூக தொண்டு செய்த அனுபவம், மருத்துவரீதியாக பெற்ற அனுபவங்கள், தலைமைத்துவம், கிராமப்புற அனுபவங்கள், ஆராய்ச்சி அனுபவங்கள், விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள். இதில் ஒன்றாக MCAT தேர்வின் மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது (1). அனைத்து நுழைவு குறியீடுகளிலும் அதிக சதவிகித மதிப்பெண் எடுக்கும் மாணவர் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் சிறப்பாக தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ கல்விக்காக தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆனால் இந்தியாவில், NEET தேர்வு சதவிகித மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு MERIT பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் பட்டியல் அடிப்படையிலும், ஜாதி ஒதுக்கீடு அடிப்படையிலும், ஒரு மாணவனுக்கு மருத்துவ படிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த கொள்கை சில கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறது. Prometric என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு இதனால் எத்தனை கோடி லாபம்? மேலும் படியுங்கள்.
1. 1990 ஆம் ஆண்டில் Prometric நிறுவனம் தொடங்கப்பட்டது. மிக வேகமாக வளர்ந்த இந்நிறுவனம், 2009ம் ஆண்டில், CAT பரீட்சை நடத்துவதற்காக இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) நிறுவனத்தினுடன் $ 40 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்தது (2). இது போல இந்தியாவில் பல முக்கிய தேர்வுகளை நடத்துவதற்கு Prometric நிறுவனம் இந்திய அரசுடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
2. NEET தேர்வு 2012 ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 2013 இல் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதென்று அறிவித்தது. 2016 இல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் ஒன்று அவசரமாக எந்தவித விவாதமும் இல்லாமல் NEET தேர்வை அனுமதித்தது. ஏன் இந்த அவசரம்? இந்திய அரசியல்வாதிகளிடம் இந்த ஒப்பந்தங்களுக்காக Lobby செய்யப்பட்டதா?
3. NEET தேர்வு முதலில் 2017ம் ஆண்டில் Prometric நிறுவனம் நடத்தியது. இவ்வாண்டில் 11,38,890 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 2018 ம் ஆண்டு மே மாதம் 06 ஆம் தேதியன்று நடைபெற்ற NEET 2018 தேர்வில் சுமார் 13,26,725 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவ்வளவு பெரிய தேர்வை நடத்த Prometric நிறுவனம் இந்திய அரசுடன் எத்தனை கோடி ஒப்பந்தம் செய்தது என்பதை அறிக்கையாக வெளியிடவில்லை.
4. கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் NEET தேர்வு மதிப்பெண் போன்ற MCAT தேர்வு மதிப்பெண்களை மருத்துவ படிப்பிற்கு நுழைவு குறியீடாக கருதாமல் மற்ற அறிவியல் பூர்வமான முறைகளை கையாளும் போது, இந்திய அரசு ஏன் NEET தேர்வு மதிப்பெண்களை கட்டாயமாக்கியது?
5. McGill பல்கலைக் கழகம், MCAT தேர்வு பிராங்க்ஃபோன் விண்ணப்பதாரர்களுக்கு சமமற்ற வாய்ப்பை உருவாக்குகிறது என்று கூறுகிறது (3). இந்தியாவில் தரமான கல்வி கொடுக்கப்படாத கிராமப்புற மாணவர்களுக்கு NEET தேர்வு சமமற்ற வாய்ப்பை உருவாக்குகிறதா?
Reference:
1. https://www.aamc.org/download/462316/data/mcatguide.pdf
2. https://www.prometric.com/en-us/news-and-resources/press-releases/pages/Prometric-to-Expand-India-Infrastructure-in-Support-of-New-Multimillion-Dollar-Contract-with-Indian-Institutes-of-Managemen.aspx
3. http://www.macleans.ca/education/uniandcollege/mcgill-eliminates-mcat-requirements/