பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் செவ்வாய் பயணம்

நாசாவின் புதிய செவ்வாய் ரோவர் இந்த வாரம் செவ்வாயின் தூசி நிறைந்த சிவப்பு சாலையில் தரையிறங்கியது. அதன் முதல் சோதனையில், ஓடோமீட்டர் அளவின் படி 21 அடி பயணம் செய்துள்ளது.

செவ்வாயின் கடந்த கால நிகழ்வுகளின் அறிகுறிகளைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர், இரண்டு வாரங்களுக்கு பிறகு வியாழக்கிழமை செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

“இது உண்மையில் எங்கள் பயணத்தின் தொடக்கமாகும்” என்று நாசா பொறியியலாளர் ரிச் ரைபர் கூறினார். “இது ஒடிஸி போன்று சாகசங்கள், நிறைய செய்யும். இது அரக்கன் இல்லை என்று நான் நம்புகிறேன்.” என்று புராண கதைகளோடு ஒப்பிட்டு கூறினார்.

அதன் முதல் இயக்கத்தில், பெர்சிவரன்ஸ் 13 அடி (4 மீட்டர்) முன்னோக்கிச் சென்று, 150 டிகிரி இடது திருப்பத்தை எடுத்து, பின்னர் 8 அடி (2.5 மீட்டர்) பின்னோக்கி நகர்ந்தது.

வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சர்வதேச மாநாட்டின் போது, கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், செவ்வாய் கிரகத்தின் பாறைகளின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது.

“இந்த சக்கர தடங்களைப் பார்ப்பதில் நான் இவ்வளவு மகிழ்ச்சியாவேன்  என்று நினைக்கவில்லை, ஏனெனில் நான் இதற்கு முன் நிறைய சாதனைகளை பார்த்திருக்கிறேன்” என்று பொறியாளர் அனெய்ஸ் ஜரிஃபியன் கூறினார்.

விமானக் கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் பெர்சிவரன்ஸின் அனைத்து அமைப்புகளையும் சோதித்து வருகின்றனர். இதுவரை, எல்லாம் நன்றாகதான் இருக்கிறது. ரோவரின் 7-அடி (2-மீட்டர்) ரோபோ கை, செவ்வாயன்று முதல் முறையாக அதன் தசைகளை மடக்கச் செய்தது.

கார் அளவிலான ரோவர் பூமிக்கு திரும்புவதற்கு முன், அது அதன் பாதுகாப்பு “பெல்லி பான்” என்று அழைக்கப்படும் பாகத்தை கைவிட்டு, “இன்ஜெநிட்டி” (Ingenuity) என்ற சோதனை ஹெலிகாப்டரை வெளியிட வேண்டும்.

பெர்சிவரன்ஸ்-நாசாவின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான ரோவர்-பிப்ரவரி 18 அன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய US.-சின் ஒன்பதாவது விண்வெளிக்கலமாகும்.

இதற்கிடையில், நாசா விஞ்ஞானிகள் பசடேனாவில் மறைந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆக்டேவியா ஈ. பட்லரின் நினைவாக, அவர்கள் பெர்சிவரன்ஸின் டச் டவுன் தளத்திற்கு அவரின் பெயரை சூட்டவுள்ளதாக  அறிவித்துள்ளனர். அறிவியல் புனைகதைக்கு முக்கிய கவனம் செலுத்திய ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர்.

References:

    1. Maki, J. N., Gruel, D., McKinney, C., Ravine, M. A., Morales, M., Lee, D., … & Algermissen, S. (2020). The Mars 2020 Engineering Cameras and microphone on the perseverance rover: A next-generation imaging system for Mars exploration. Space Science Reviews216(8), 1-48.
    2. Zhongming, Z., Linong, L., Wangqiang, Z., & Wei, L. (2021). Touchdown! Life-searching Perseverance rover lands on Mars.
    3. Stack, K. M., Williams, N. R., Calef, F., Sun, V. Z., Williford, K. H., Farley, K. A., … & Yingst, R. A. (2020). Photogeologic map of the perseverance rover field site in Jezero Crater constructed by the Mars 2020 Science Team. Space science reviews216(8), 1-47.
    4. June, M. K. The Perseverance Rover: A Personal Perspective.
    5. Jacobstein, N. (2021). NASA’s Perseverance: Robot laboratory on Mars. Science Robotics6(52), eabh3167.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com