ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் பற்றி தினை உற்பத்தியாளர்களின் அறிவு நிலை

பாரம்பரிய உணவுகளில் உலகளவில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அந்த வகையில், இந்தியாவில் உள்ள திணை வகைகளில் விரலி திணை(Finger millet) ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தமிழ்நாட்டில், 1,04,426 ஹெக்டேர் பரப்பளவில் 349.63 லட்சம் டன்கள் உற்பத்தி மற்றும் 3,348 கிலோ ஹெக்டேர் சராசரி உற்பத்தித்திறன் கொண்டது இத்திணை. திணையில் ஊட்டச் சத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலைத் திறம்பட அதிகரிக்கலாம். திணையின் ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் மகசூல் அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் குறித்து விரலி திணை உற்பத்தியாளர்களின் அறிவின் அளவை ஆய்வு செய்வதற்காக Prasanth, et. al., (2022) அவர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி மற்றும் கெலமங்கலம் தொகுதிகளில் 120 விரலி திணை விவசாயிகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான பதிலளித்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் பற்றிய நடுத்தர முதல் உயர் மட்ட அறிவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பதிலளித்தவர்களின் அறிவு மட்டத்தில் பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக இருந்தது. எனவே, மாநில வேளாண்மைத் துறையானது, விரலி சாகுபடியில் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் குறித்து விவசாயிகளின் அறிவாற்றலை அதிகரிக்க, செயல்விளக்கம், பயிற்சித் திட்டங்கள் மற்றும் களப் பயணம் போன்ற தேவையான பயிற்சிகளை வழங்கவேண்டும் ஆய்வின் முடிவி தெளிவுபடுத்தியது.

References:

  • Prasanth, A., & Murugan, P. P. (2022). Knowledge Level of Finger Millet Growers about Nutrient Management Practices in Krishnagiri District of Tamil Nadu. Madras Agricultural Journal108(september (7-9)), 1.
  • Thilakarathna, M. S., & Raizada, M. N. (2015). A review of nutrient management studies involving finger millet in the semi-arid tropics of Asia and Africa. Agronomy5(3), 262-290.
  • Varalakshmi, L. R., Srinivasamurthy, C. A., & Bhaskar, S. (2005). Effect of integrated use of organic manures and inorganic fertilizers on organic carbon, available N, P and K in sustaining productivity of groundnut-finger millet cropping system. Journal of the Indian Society of soil Science53(3), 315-318.
  • Rajashekhara Rao, B. K., Krishnappa, K., Srinivasarao, C., Wani, S. P., Sahrawat, K. L., & Pardhasaradhi, G. (2012). Alleviation of multinutrient deficiency for productivity enhancement of rain-fed soybean and finger millet in the semi-arid region of India. Communications in soil science and plant analysis43(10), 1427-1435.
  • Srinivasarao, C., Kundu, S., Ramachandrappa, B. K., Reddy, S., Lal, R., Venkateswarlu, B., & Naik, R. P. (2014). Potassium release characteristics, potassium balance, and fingermillet (Eleusine coracana G.) yield sustainability in a 27-year long experiment on an Alfisol in the semi-arid tropical India. Plant and soil374(1), 315-330.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com