2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறது

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் வரவிருக்கும் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியீட்டுக்கு முன் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான சான்றிதழ் வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இந்த மனுவை நீதிபதி பி டி ஆஷா அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி சார்பில் தயாரிப்பாளர் கே வெங்கட ரமணாவை பிரதிநிதித்துவப்படுத்தி மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

டிசம்பர் 18 அன்று படம் சான்றிதழுக்காக முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு சில காட்சிகளை நீக்குமாறு CBFC அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, டிசம்பர் 24 அன்று படம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. மத உணர்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் சில சண்டைக் காட்சிகள் உள்ளதால், படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்படும் என CBFC தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், ஜனவரி 5 அன்று, படத்திற்கு எதிராக ஒரு புகார் வந்ததாகக் கூறி, சான்றிதழ் வழங்கும் முடிவை மறுஆய்வுக் குழுவிடம் ஒப்படைத்ததாக CBFC மீண்டும் தகவல் அனுப்பியதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

தெளிவற்ற, வெளியிடப்படாத ஒரு புகாரின் அடிப்படையில் சான்றிதழ் தாமதப்படுத்தப்படுவது நியாயமற்றது என வாதிட்ட அவர், படம் வெளியாகும் முன்பே அதன் உள்ளடக்கம் குறித்து எப்படி புகார் அளிக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார். திட்டமிட்டபடி படம் வெளியாக, உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், CBFC இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப தலைவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வாரியத்திற்குக் கிடைத்த புகாரின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி பி டி ஆஷா, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com