ஊட்டச்சத்து தானியங்களின் பகுப்பாய்வு
ஊட்டச்சத்து தானியங்களின் வளர்ச்சி விகிதம், உறுதியற்ற தன்மை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை அறிய T. Nivetha, et. al., 2022ல் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, 20 வருட காலத்திற்கான (2001-2020) ஊட்டச்சத்து தானியங்களின் விளைச்சலின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் வேளாண் புள்ளிவிவரங்களிலிருந்து(2020) பருவம் மற்றும் பயிர் அறிக்கையின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஊட்டச்சத்து தானியங்களின் வளர்ச்சியின் விகிதத்தை கூட்டு வருடாந்திர வளர்ச்சியின் மூலம் மதிப்பிடலாம். இவ்விகிதம், உறுதியற்ற தன்மை குறியீட்டு மற்றும் விளைச்சலின் பங்களிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. சிதைவு பகுப்பாய்வு மூலம் உற்பத்தி ஆய்வு செய்யப்படுகிறது.
ஊட்டசத்து தானியங்களின் வளர்ச்சி விகிதம் முதல் 10 வருடத்தில் எதிர்மறையாகவும், இரண்டாவது 10 வருடத்தில் நேர்மறையாகவும் இருப்பதாகவும் முடிவுகள் வெளிப்படுத்தின. இரண்டு 10 வருடங்களிலும் ஊட்டச்சத்து தானியங்களின் உற்பத்தி சரிவில் சாதகமானதாக இருந்தது. நிலையற்ற தன்மையின் பரப்பளவு மற்றும் உற்பத்தித்திறனை விட உற்பத்தியின் அடிப்படையில் குறியீட்டு எண் அதிகமாக உள்ளது. ஆய்வின்படி, ஊட்டச்சத்து தானியங்கள் சாகுபடி பரப்பை அரசு மேம்படுத்த வேண்டும்.
References:
- Nivetha, T., & Uma, K. Growth, Instability and Decomposition Analysis of Nutri Cereals in Tamil Nadu.
- Karuppasamy, P. (2020). Nutritional and functional variability of Nutri cereals.
- Augustine, R., & Kalyanasundaram, D. (2021). Effect of agronomic biofortification on growth, yield, uptake and quality characters of maize (Zea mays. L) through integrated management practices under North-eastern region of Tamil Nadu, India. Journal of Applied and Natural Science, 13(1), 278-286.
- Anbukkani, P., Balaji, S. J., & Nithyashree, M. L. (2017). Production and consumption of minor millets in India-A structural break analysis. Agric. Res. New Series, 38, 1-8.
- Nirmalakumari, A., Parasuraman, K. S., Umamageswari, C., Sathiya, K., Rajesh, M., Ananthi, K., & Ambedkar, V. (2020). Small millets in rice fallow: A beneficial choice for promotion of ‘Nutri-cereals’. Extended Summaries, 857.