மகிமை

இந்த நாளில் தாவீதின் ஜெபத்தை நாம் தியானிக்க போகிறோம். தாவீது அநேக ஜெபங்களை நமக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார், சொல்லிகொடுத்து இருக்கிறார். அவைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஒன்று நாலாகமம் இருபத்தி ஒன்பதாம் அதிகாரம் பதினொராம் வசனத்திலே, கர்த்தாவே! மாட்சிமையும், வல்லமையும், மகிமையும், ஜெயமும், மகத்துவமும் உம்முடையவைகள். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்.

கர்த்தாவே ராஜ்ஜியம் உம்முடையது. தேவரீர்! எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்து இருக்கிறீர் என்று சொல்லி தாவீது இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். தன்னுடைய நாட்களிலேயே இரண்டு குமாரனாகிய சாலமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ண செய்து, தன்னுடைய சிங்காசனத்திலே உட்கார செய்து அவனுக்கு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்து சந்தோஷப்படுகிறதை நாம் பார்க்கிறோம்.

கர்த்தருடைய வார்த்தைகளின்படியாக தாவீது இந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்கின்றான். தாவீதுனுடைய மனவிருப்பங்களின்படி சாலமோனும் எரிசலேமில் தேவாலயத்தை கட்டுவதற்காக மனமுவந்து தன்னுடைய காரியங்களை நடப்பித்து முன்வருகின்றான். ஆயத்தப்படுகிறான். அந்த நாட்களிலே தாவீது ராஜாவாகிய சாலமோனையும், இஸ்ரவேல் ஜனங்களையும், அதிபதிகளையும், பிரபுக்களையும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளையும், நூறு பேருக்கு அதிபதிகளையும் கூடிவர செய்து அவர்களை உற்சாகபடுத்தி ஆலயத்தை கட்டுவதற்காக அவர்களை ஒருமுகப்படுத்துகிறான். தான் சேகரித்து வைத்திருந்த பொன்னையும் வெள்ளியையும் கோப்பியரின் தங்கத்தையும் கொடுத்து அந்த ஊழியங்களை தாங்க முன்வருகின்றான். கொடுக்கிறான். அதை பார்த்து சகல ஜனங்களும் கொடுக்கிறார்கள். அப்பொழுதுதான் தாவீது நீர் மாட்சிமை நிறைந்த கர்த்தர், நீர் வல்லமை நிறைந்த கர்த்தர், மகிமையுள்ள தேவன் ஜெயத்தையும் வெற்றியையும் கொடுத்து ஆசிர்வதிக்கிறவர் என்று சொல்லி ஜெபிக்கிறான். இந்த ஜெபத்தை நாங்களும் ஏறெடுக்கிறோம். மகிமையுள்ள ஆண்டவருக்கு முன்பாக எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம்.

வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனே! எல்லா தேசங்களுக்கும் எல்லா ராஜாக்களுக்கும் மேலானவராக இருக்கிறீர். சகல ஆளுகையும் உமக்கு கீழாக இருக்கிறது. நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்கிறவர். எம்முடைய ஜெபத்தையும் கேட்பீராக. எம்முடைய மன உற்சாகத்தையும் மன விருப்பங்களையும் கட்டளையிட்டு ஆசிர்வதிப்பீராக. கர்த்தர் எங்களுக்கு போதுமானவராக இருக்கிறார். பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலமாக ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com