வேளாண் துறையில் மாநில விரிவாக்கச் சேவைகளைப் பயன்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியாவில் முக்கியத்தொழில்களில் ஒன்றாக கருதப்படுவது விவசாயம். அதனாலேயே, இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் பார்க்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்களுக்கான மூலப்பொருட்களின் பெரும்பகுதியை வழங்குகிறது அதன்மூலமே ஊதியத்தையும் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளுக்கும் தேவையான பொருட்களும் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக, விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அரசுசெயல்படுத்தி வருகிறது. தகவல் பாரிமாற்றம்  மற்றும்  விவசாய அறிவு  ஒரு விவசாய சமூகத்தின்  வளர்ச்சியில்  இன்றியமையாததாக உள்ளது . விவசாய நடவடிக்கைகள் இளைஞர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விலைமதிப்பற்ற சொத்து  ஆகும். இவர்களின் திறமைகள் மற்றும் திறன்களை சரியாக வழிநடத்தினால்  விவசாயம் நிலையான வளர்ச்சியை அடையும். எனவே, தற்போது  மாநில விவசாயத் துறையின் விரிவாக்க சேவைகளின்  பயன்பாட்டை பாதிக்கும் காரணிகளை மதிப்பிடுவதற்கு M. Kavaskar, et. al., (2021) அவர்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது,  120 விவசாயம் செய்யும் இளைஞர்களின் மாதிரி அளவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பதினான்கு பண்புகளில், ஆறு மாறிகள் அதாவது கல்வி நிலை, சமூக பங்கேற்பு, வெகுஜன ஊடக வெளிப்பாடு புதுமை தகவல் தேடும் நடத்தை மற்றும் தகவல் பகிர்வு ஆகியவை பயன்பாட்டு நிலையுடன் நேர்மறையை காட்டியது.

References:

  • Kavaskar, M., & Booma, R. (2021). 19. Factors Influencing the Utilization of Extension Services of State Department of Agriculture among the Farm Youth in Tamil Nadu. Cape Comorin Trust, India, 177.
  • Babu, S. C., Glendenning, C. J., Okyere, K. A., & Govindarajan, S. K. (2012). Farmers’ information needs and search behaviors: Case study in Tamil Nadu, India(No. 1007-2016-79468).
  • Madhava, C. K., & Surendran, U. (2016). Study on factors influencing the adoption of drip irrigation by farmers in humid tropical Kerala, India.
  • Kumar, S., Sharma, G., & Yadav, V. (2013). Factors influencing entrepreneurial behaviour of vegetable growers. Indian Res. J. Ext. Edu13(1).
  • Ramasubramaniyan, R., Vasanthakumar, J., & BS, H. (2016). Knowledge and Adoption of Conservation Agriculture Technologies by the Farming Community in Different Agro-Climatic Zones of Tamil Nadu State in India. Journal of Agricultural Science8(11), 154-169.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com