வாடிக்கையாளரின் பார்வையில் வங்கிகளில் CSR செயல்பாடுகளின் திருப்தி நிலை

கார்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் சமிப காலங்களில் சமூகப் பொறுப்பு என்பது பெருநிறுவனங்களிடம் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி மாறிவிட்டது. இதற்கு,  வங்கிகள் விதிவிலக்கானவை அல்ல. அதனால், வங்கிகளின் CSR(Corporate Social Responsibility) செயல்பாடுகளின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து, Dr. S. Bhawiya Roopaa, et. al., (2022) அவர்களின் கட்டுரையானது குறிப்பிட்ட வங்கிகளின் CSR செயல்பாடுகளின் அளவை மதிப்பிடும் முயற்சியை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த நோக்கத்திற்காக, கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் வங்கித் துறையில் அவற்றின் தாக்கம், CSR-இன் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வின் அளவை ஆய்வு செய்கிறது. மேலும், இந்த ஆய்வு சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் வங்கித் துறையில் CSR செயல்பாடுகளின் தாக்கங்களை ஆய்வு செய்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பார்வையில் தற்போதுள்ள CSR செயல்பாடுகளின்  நிலையை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முதன்மைத் தரவைப் பயன்படுத்தினர். ஃபிரைட்மேன் சோதனை மற்றும் காரணி பகுப்பாய்வு உதவியுடன் தரவு பகுப்பாய்வும் செய்யப்பட்டது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் CSR நடவடிக்கைகள் குறித்து மிகவும் அறிந்துள்ளனர். இது வங்கியின் நற்பெயரை கணிசமாக பாதித்துள்ளது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

References:

  • Roopaa, S. B., & Gopinath, R. (2022). Evaluation on satisfaction level of CSR activities in Banks of Tamil Nadu from customer’s perspective-a study.
  • Tran, Y. T. H. (2014). CSR in banking sector a literature review and new research directions.
  • Jain, A., Keneley, M., & Thomson, D. (2015). Voluntary CSR disclosure works! Evidence from Asia-Pacific banks. Social Responsibility Journal.
  • Zafar, M. B., & Sulaiman, A. A. (2019). Corporate social responsibility and Islamic banks: a systematic literature review. Management Review Quarterly69(2), 159-206.
  • Alamer, A. R. A., Salamon, H. B., Qureshi, M. I., & Rasli, A. M. (2015). CSR’s measuring corporate social responsibility practice in Islamic banking: A review. International Journal of Economics and Financial Issues5(1S).

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com