கணினி அறிவியல் கல்வியில் ஆங்கில மொழி கற்றவர்கள்
ஆங்கில மொழிப் பல்கலைக் கழகங்கள் கணினியின் மூலம் ஆங்கில மொழியைக் கற்கும் மாணவர்களை (ELLs-English Language Learners) அதிகளவில் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாணவர்களின் கற்றல் தேவைகள் தாய்மொழியில் இருந்து வேறுபடுகின்றனவா? அப்படி வேறுபாடு இந்தால் அது எப்படி வேறுபடுகின்றன என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆங்கில மொழி கற்பவர்கள் மத்தியில் கணினி பங்கேற்பை அதிகரிப்பதற்கான பரவலான முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த மாணவர்களுக்கு கணினி அறிவியலைக் கற்பிப்பதில் ஒப்பீட்டளவில் சிறிய ஆராய்ச்சியே உள்ளது. இது குறித்து Yinchen Lei அவர்களின் ஆராய்ச்சியில், கற்றல் திறன் குறித்தும் அதன் மூலம் வளர்ந்து வரும் வேலைகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆராய்ச்சியுடன் தொடர்புடைய 54 கட்டுரைகளை அடையாளம் காணவும், அவற்றின் பொதுவான தன்மைகளை அட்டவணைப்படுத்தவும் ஒரு ஸ்கோப்பிங் மதிப்பாய்வும் நடத்தப்பட்டது. கருப்பொருள்களை அடையாளம் கண்ட பிறகு, அவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் தரமான பகுப்பாய்வு செய்யப்பட்டது. மெட்டா-தீம்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: ELL மாணவர்களுக்கு என்ன நன்மைகள் மற்றும் தடைகள் என்று ஆராய்வது. ஒருங்கிணைந்த மொழித் திறனில் கவனம் செலுத்துதல், மற்றும் கல்வியியல் மற்றும் பாடத்திட்ட அணுகுமுறைகள் ஆகியவை ஆகும். இந்த ஸ்கோப்பிங் மதிப்பாய்வின் மூலம், 54 வெளியீடுகளின் சுருக்கமும் தொகுப்பும் வழங்கப்பட்டன. மேலும், விரிவாக ஆராயப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் கருப்பொருள்களை அடையாளம் காணவும் பயன்படுகிறது.
References:
- Lei, Y., & Allen, M. (2022, February). English Language Learners in Computer Science Education: A Scoping Review. In Proceedings of the 53rd ACM Technical Symposium on Computer Science Education(pp. 57-63).
- Asif, M., Sheeraz, M., & Sacco, S. J. (2022). Evaluating the impact of technological tools on the academic performance of English language learners at tertiary level: A pilot investigation. Pegem Journal of Education and Instruction, 12(1), 272-282.
- Aisha, A., & Hayati, R. (2022). Students’perception Toward The High Target Score Of Usept At The Faculty Of Computer Science(Doctoral dissertation, Sriwijaya University).
- Maqsood, S., Shahid, A., Afzal, M. T., Roman, M., Khan, Z., Nawaz, Z., & Aziz, M. H. (2022). Assessing English language sentences readability using machine learning models. PeerJ Computer Science, 7, e818.
- Ariza, J. Á., & Baez, H. (2022). Understanding the role of single‐board computers in engineering and computer science education: A systematic literature review. Computer Applications in Engineering Education, 30(1), 304-329.