லேசரால் இரட்டிப்பாகும் எதிர்பொருள்கள் (Antimatter)

லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில்(LLNL) உள்ள விஞ்ஞானிகள், எதிர்ப்பொருள் (Antimatter) எனப்படும் பாசிட்ரானின் அளவை 100% வரை அதிகரிக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.

நுண்கட்டமைப்புகளைக் கொண்ட லேசரின் இடைமுகத்தில் அதிக செறிவு மிக்க லேசரை படச்செய்யும்போது, எதிர்பொருளின்(பாசிட்ரான் எனவும் அழைக்கப்படுகிறது) அளவு 100 சதவீதம் அதிகரிக்கிறது.

முந்தைய ஆராய்ச்சியில் ஒரு சிறிய தங்க மாதிரியைப் பயன்படுத்திய பொழுது சுமார் 100 பில்லியன் எதிர்பொருள் துகள்களை உருவாக்கியது. புதிய சோதனைகள் அதை இரட்டிப்பாக்கின.

“இந்த வெற்றிகரமான சோதனை முடிவுகள் பாசிட்ரான் திட்டத்திற்கு முக்கியமானவை, காமா-கதிர் சிதைவில், இயற்பியலைப் படிப்பதற்கு போதுமான எலக்ட்ரான்-பாசிட்ரான் எதிர்பொருளை உருவாக்குவதே இதன் மகத்தான குறிக்கோள்” என்று திட்டத் தலைவரும் ஆராய்ச்சியின் இணை ஆசிரியருமான ஹுய் சென் கூறினார். “ஆனால் சோதனையின் முடிவுகள் அதிக அடர்த்தியான பொருள்களை ஊடுருவக்கூடிய உயர் ஆற்றல் (MeV) எக்ஸ் கதிர்களையும் உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்தோம், இது உயர் ஆற்றல்  கொண்ட அறிவியலின் பல அம்சங்களுக்கு முக்கியமானது.”

மைக்ரோ கட்டமைப்புகளை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்கள் முந்தைய முடிவுகளையும் புதிய உருவகப்படுத்துதல்களையும் பயன்படுத்தினர், இது இந்த தொடர்புகளை மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யலாம், ஆராய்ச்சியின் முந்தைய நிலைக்கு ஒப்பிடும்போது மேம்பட்ட அல்லது அடக்கப்பட்ட பாசிட்ரான் எதிர்கால ஆய்வுகளுக்கு பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இணை எழுத்தாளர் அந்தோனி, “உருவகப்படுத்துதல்களுக்கும், சோதனைக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்கதாகும், இது மிக முக்கியமான இயற்பியல் சோதனைகளுக்கு முறைகளுக்கு வழிவகுக்கும்” என்று நம்பிக்கை கூறினார்.

 

ஒரு சிறிய ஆய்வகத்தில் ஏராளமான பாசிட்ரான்களை உருவாக்கும் திறனானது, கருந்துளைகள், காமா-கதிர் சிதைவுகள் மற்றும் அடர்மிகு எலக்ட்ரான்—பாசிட்ரானின் போன்ற பல்வேறு வானியற்பியல் நிகழ்வுகளுக்கு அடிப்படையான பல ஆய்வுகளுக்கு வழி வழிவகுக்கிறது. “வழக்கமான தங்க இலக்குடன், முன் மேற்பரப்பு நுண் கட்டமைப்புகளைச் சேர்த்து, அதே லேசர் நிலைமைகளை வைத்திருப்பது, குறைந்த செலவுடைய அணுகுமுறையாகும். பல்வேறு பயன்பாடுகளுக்கு லேசர் உருவாக்கிய பாசிட்ரான் மூலங்களைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு படி மேலே உள்ளது.”என்று ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியர் ஜியாங் ஷெங் கூறினார்.

 

References:

  1. Perez, P., Banerjee, D., Biraben, F., Brook-Roberge, D., Charlton, M., Cladé, P., … & Yamazaki, Y. (2015). The GBAR antimatter gravity experiment. Hyperfine Interactions233(1), 21-27.
  2. Krajewska, K., & Kamiński, J. Z. (2014). Coherent combs of antimatter from nonlinear electron-positron-pair creation. Physical Review A90(5), 052108.
  3. Kellerbauer, A., Amoretti, M., Belov, A. S., Bonomi, G., Boscolo, I., Brusa, R. S., … & AEGIS Proto-Collaboration. (2008). Proposed antimatter gravity measurement with an antihydrogen beam. Nuclear Instruments and Methods in Physics Research Section B: Beam Interactions with Materials and Atoms266(3), 351-356.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com