நான் எந்த இனத்தை சேர்ந்தவன்?

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது நமக்கு தெரியும். அவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா. நம் உலகத்தை புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தினால் ஐந்து பிரதான புவியியல் மண்டலங்களாக பிரிக்கலாம். அவை அமெரிக்கா, ஓசியானியா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா. மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலக்கட்டத்தில் உயிர்பிழைப்பதற்கு தகுந்த இடங்களில் நிரந்திரமாக குடியேறினார்கள். இருப்பினும் பல்வேறு காலக்கட்டத்தில் திரைகடலோடி தொடர்ச்சியாக இடம்பெயர்ந்துக்கொண்டே இருந்தார்கள். டி.என்.ஏ சோதனைகளின் சிறப்பம்சம் என்னவென்றால், அவை நீங்கள் இந்த பூமியின் எந்த இனத்தை சேர்ந்தவர் எனன்பதை துல்லியமாக கண்டறிந்து சொல்லிவிடும்.

எப்படி? உலகில் பல்லாயிரக்கணக்கான இடங்களிலிருந்து தருவிக்கப்பட்ட உமிழ்நீர் மாதிரிகளைக்கொண்டு சில நிறுவனங்கள் மிகப்பெரிய டி.என்.ஏ தரவுத்தளங்களை உருவாக்கியுள்ளன. இந்த தரவுத்தளங்களுக்கு உமிழ்நீர் மாதிரிகளை கொடுத்தவர்கள் புவியியல் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது முன்னோர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுத்தளங்கள் உங்களுக்கு ஒரு குறிப்புத்தளமாக பயன்படும். அதாவது உங்கள் உமிழ்நீரை இந்த நிறுவனங்களுக்கு அனுப்பினால் அவர்கள் உங்கள் உமிழ்நீரில் உள்ள டி.என்.ஏவையும் அவர்கள் தரவுத்தளங்களிலுள்ள உமிழ்நீரிலிருந்த டி.என்.ஏ வையும் ஒப்பிட்டு நீங்கள் இந்த உலகின் எந்த இனத்தை சேர்ந்தவர் என கண்டறிவார்கள்.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட டி.என்.ஏ உலக வரைபடத்தை கீழே பாருங்கள். இந்த ஆட்டோஸோமல் டி.என்.ஏ சோதனையின் மூலம் நீங்கள் உலகின் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என சுலபமாக அறிய முடியும். மேலும் நடத்தப்பட்ட டி.என்.ஏ ஆய்வுகளின் அடிப்படையில், எந்த இரண்டு மனிதர்களும் 99.9 சதவிகிதம் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. எனவே, விஞ்ஞானிகள் ‘இனம்’ ஒரு சமூக கட்டமைப்பாகும், ‘உயிரியல் காரணி’ அல்ல என்று வாதிடுகின்றனர். விஞ்ஞானிகள் தற்பொழுது ‘இனம்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘மூதாதையர்’ அல்லது ‘மக்கள்தொகை’ போன்ற சொற்களைப் பயன்படுத்தி ‘தனிநபர்’ மற்றும் ‘மக்கள்தொகை’ மட்டத்தில் மனிதர்களுக்கும் அவர்களின் மரபணுக்களுக்கும் இடையிலான உறவை இன்னும் துல்லியமாக விளக்குகிறார்கள். எனவே, ‘நான் எந்த இனத்தை சேர்ந்தவன்/ள்?’ என்ற கேள்விக்கு பதிலாக ‘என் மூதாதையர் எங்கு வாழ்ந்தார்கள்?’ என்ற கேள்வியே அறிவியலின் படி சரியாக இருக்க முடியும்.

Image Credit: Hans Braxmeierபடம் : By Hans Braxmeier, Oberholster Venita [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

References:

  • Foeman, A., Lawton, B. L., & Rieger, R. (2015). Questioning race: Ancestry DNA and dialog on race. Communication Monographs82(2), 271-290.
  • Sankar, P. (2012). 7. Forensic DNA Phenotyping: Continuity and Change in the History of Race, Genetics, and Policing. In Genetics and the Unsettled Past (pp. 104-113). Rutgers University Press.
  • Raffington, L., Belsky, D. W., Malanchini, M., Tucker-Drob, E. M., & Harden, K. P. (2020). Analysis of socioeconomic disadvantage and pace of aging measured in saliva DNA methylation of children and adolescents. bioRxiv.
  • Nyborg H. Race as Social Construct. Psych. 2019; 1(1):139-165. https://doi.org/10.3390/psych1010011

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com