வெள்ளத்திற்குப் பிறகு நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்
3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழத்தில் உள்ள சென்னையில் அதிக மழைப்பொழிவின் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்களின் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதம் வரையில் நேரம் பிடித்தது. இது ஒருபுரம் இருக்க பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் தண்ணீரின் தரம் மோசமான நிலைக்கு சென்று விட்டதாக கூறுகிறது, Rajendran A, et. al., (2022) அவர்களின் ஆய்வு. சென்னையில் உள்ள நீலாங்கரை மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பத்து இடங்களில் நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சுனாமிக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் ஹீபர் நீர் தரக் குறியீட்டைப் (HWQI-Heber Water Quality Index) பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட காரணிகள் pH, கோலிஃபார்ம், மொத்த கரைந்த திடப்பொருள்கள் (TDS-Total Dissolved Solids), கரைந்த ஆக்ஸிஜன் (DO-Dissolved Oxygen), வெப்பநிலை உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் (BOD- Biochemical Oxygen Demand) மற்றும் கலங்கியநிலை ஆகியவை தெளிவாக தெரியவந்தது. இந்த அளவுருக்களுடன் கூடுதலாக, மின் கடத்துத்திறன் மற்றும் உப்புத்தன்மை போன்றவைகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. நீலாங்கரை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளின் அனைத்து சோதனைகளுக்கும் HWQI முடிவுகள் முறையே 65.02-72.25 மற்றும் 66.64 – 70.71 இடையில் தீர்மானிக்கப்பட்டது. இந்த அனைத்து மாதிரிகளிலும் நீரானது நடுத்தர தரம் கொண்டது மற்றும் மனித நுகர்வுக்கு பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வின் முடிவு கூறுகிறது. இருப்பினும், நீரின் தரம் முன்பிருந்ததைக்காட்டிலும் மோசமாகி விட்டது என்பதே வேதனையான விஷயம்.
References:
- Rajendran, A., Mansiya, C., & Shanmuganathan, M. (2022). Assessment of Quality of Ground Water Body of Neelangarai and Triplicane Area in Chennai, Tamil Nadu in The Post Inundation Circumstances.
- Brkić, Ž., Kuhta, M., Larva, O., & Gottstein, S. (2019). Groundwater and connected ecosystems: An overview of groundwater body status assessment in Croatia. Environmental Sciences Europe, 31(1), 1-20.
- Vijay, R., Khobragade, P., & Mohapatra, P. K. (2011). Assessment of groundwater quality in Puri City, India: an impact of anthropogenic activities. Environmental monitoring and assessment, 177(1), 409-418.
- Frollini, E., Preziosi, E., Calace, N., Guerra, M., Guyennon, N., Marcaccio, M., & Ghergo, S. (2021). Groundwater quality trend and trend reversal assessment in the European Water Framework Directive context: an example with nitrates in Italy. Environmental Science and Pollution Research, 28(17), 22092-22104.
- Bidhuri, S., & Khan, M. M. A. (2020). Assessment of ground water quality of central and southeast districts of NCT of Delhi. Journal of the Geological Society of India, 95(1), 95-103.