இந்தியாவில் விவசாயம் அழிகிறதா? நாம் உணவை சரியாக கையாள்கிறோமா?

சிந்தனைக்கொரு உணவு.

2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக, உலக மக்கள் தொகை அதிகரிப்பதினால் ஏற்பதும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தியா தொன்றுதொட்டு ஒரு விவசாய நிலமாகவே இருந்துள்ளது. வள்ளுவர் சொன்னது போல, உழவு தொழில் செய்யாமல் இருப்பவர்கள் அனைவரையும் உழவர்கள் தங்கள் உழைப்பின் மூலம் தாங்குவதால், உழவர்களே இந்த உலகின் அச்சாணி என்றால் மிகையாகாது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
– (குறள் 1032)

ஆனால் இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது (1).

இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் உணவு உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது (1). இந்த உற்பத்தி அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அறிவியல் சார்ந்த விவசாய நடைமுறைகள் என கூறலாம்.

இந்த அசுர வளர்ச்சியினால், இந்தியாவில் தேவைக்கு அதிகமாக உணவு இருக்கிறது (2) என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், உலகளவில் 20% தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி இருந்தது (2). இது மட்டுமல்லாமல், உணவு விரயமும் அச்சம் தரும் அளவிற்கு அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது (2).

இந்த உலகளாவிய நிலை நம்மிடம் முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
1. இதற்கு மேல் நமது உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா?
2. காவேரி நீர் தேவை, தமிழக மற்றும் இந்திய அரசின் தவறான உணவு பாதுகாப்பு கொள்கையினால் விவசாயிகளின் மீது திணிக்கப்பட்டுள்ளதா?
3. வருங்கால தேவைக்கேற்ப எவ்வாறு உணவு உற்பத்தியையும், உணவு விரயத்தையும் எப்படி கையாள்வது?

நாம் உணவை வீணாக விரயம் செய்வதை தவிர்த்தால், உலகளவில் அதிகரிக்கும் உணவுத்தேவையை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் எதிர்கொள்ள முடியும்.

References:

  • Balaji, M., & Arshinder, K. (2016). Modeling the causes of food wastage in Indian perishable food supply chain. Resources, Conservation and Recycling114, 153-167.
  • Ramesh, P., Panwar, N. R., Singh, A. B., Ramana, S., Yadav, S. K., Shrivastava, R., & Rao, A. S. (2010). Status of organic farming in India. Current Science, 1190-1194.
  • Deaton, A., & Drèze, J. (2009). Food and nutrition in India: facts and interpretations. Economic and political weekly, 42-65.

தலைப்பு படம் : By Suanpa [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com