Alert for high rise waves in South India | தென் தமிழகத்தில் கடல் சீற்றம்

இமேஜ் கிரெடிட்: சோசியல் மீடியா

தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குமரி மாவட்டத்திலுள்ள குளைச்சல், வல்லவிளை போன்ற கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த மூன்று நாட்களாக மிக அதிகமாக இருந்து வருகிறது. இன்று இரவு முதல் கடலோரத்தில் உள்ள கொட்டில் பாடு, குளைச்சல், மண்டைக்காடு, வல்லவிளை மற்றும் பூந்துறை போன்ற மீனவ கிராமங்களில் மிக பெரிய ராட்சத அலைகள் (10 அடி உயரம்) அதிகமாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.

இதனால் குமரி மாவட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் இன்று காலை மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பினார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த முறை அங்கிருக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com