குடிநீரின் தரம் பற்றிய ஆய்வு
Senthilkumar M, et. al., (2022) அவர்களின் ஆய்வானது நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுருக்களில் ஹைட்ரோ புவி இரசாயனத்தைப் தெரிந்துகொள்வது மற்றும் நீர் தரக் குறியீட்டின் (WQI- water quality index) வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் 2 பருவங்களுக்கு (வடகிழக்கு பருவமழை மற்றும் பிந்தைய பருவமழை) குடிநீரின் தரம் மற்றும் அவற்றின் பருவகால வேறுபாடுகளை DWQI (குடிநீரின் தரக் குறியீடு- Drinking water quality index) மதிப்பீடு செய்யப்பட்டது. இரண்டு பருவங்களிலும் 144 நிலத்தடி நீர் மாதிரிகள் மாவட்டம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டது. குடிநீர் தரக் குறியீட்டில் கருதப்படும் இயற்பியல் வேதியியல் அளவுருக்கள் pH, TDS, மற்றும் Ca2+, Mg2+, Na+ , K+ போன்ற எதிரயனிகளை உள்ளடக்கி இருந்தது. மேலும் நேரயனிகளான, Cl−, SO42−, HCO–,PO42− மற்றும் NO3– ஆகியவை கருதப்பட்டது. TDS, Na+ , HCO3– மற்றும் Cl− அதிகமாக இருந்தால் மோசமான நீரின் தரத்தைக் குறிக்கிறது. DWQI-இன் இடஞ்சார்ந்த விநியோகம் (spatial distribution) முற்றிலும் வேறுபட்ட பகுதிகளில் உள்ள திட்டுகளில் நீரின் தரம் சிறப்பானதாக தீர்மானிக்கப்படுகிறது. பிராந்தியத்தில் உள்ள DWQI இன் மாற்றமானது பருவமழை அயனிகளின் செயல்பாடு, வானிலை மற்றும் செயல்முறைகள் காரணமாகவும் அனைத்து பருவகாலத்திலும் மாற்றமடையலாம் என்று ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
References:
- District, I. V. A Study On The Drinking Water Quality Index And Groundwater Quality Assessment In Virudhunagar District, Tamilnadu, India.
- Jha, M. K., Shekhar, A., & Jenifer, M. A. (2020). Assessing groundwater quality for drinking water supply using hybrid fuzzy-GIS-based water quality index. Water Research, 179, 115867.
- Ibrahim, M. N. (2019). Assessing groundwater quality for drinking purpose in Jordan: application of water quality index. Journal of Ecological Engineering, 20(3).
- Adimalla, N., Li, P., & Venkatayogi, S. (2018). Hydrogeochemical evaluation of groundwater quality for drinking and irrigation purposes and integrated interpretation with water quality index studies. Environmental Processes, 5(2), 363-383.
- Saeedi, M., Abessi, O., Sharifi, F., & Meraji, H. (2010). Development of groundwater quality index. Environmental monitoring and assessment, 163(1), 327-335.