70வது குடியரசு தினத்தன்று நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை!

இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று, 30 ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு பேருந்துகளை நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை வழங்கியது. மேலும் நேபாளம் செழிப்பு அடைவதற்கு இந்திய அரசு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தது.

நேபால் நாட்டிற்கான இந்திய தூதர் மஞ்செவ் சிங் பூரி, இந்திய தூதரகம் வளாகத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் மத்தியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேருந்துகளின் சாவிகளை வழங்கினார். 1994 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு 722 ஆம்புலன்ஸ் மற்றும் 142 பஸ்கள் இந்திய அரசு வழங்கியுள்ளது. இந்திய தூதர் மஞ்செவ் சிங் பூரி, கூர்க்கா படை முன்னாள் போர் வீரர்களின் உறவினர்களுக்கு பணம் மற்றும், நாடு முழுவதும் உள்ள 53 பள்ளிகளிலுள்ள நூலகங்களுக்கு நூல்களை பரிசளித்தார்.

இந்திய தேசியக் கொடியேற்றிய பிறகு இந்திய தூதர் மஞ்செவ் சிங் பூரி அவர்கள் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட செய்தியை வாசித்தார். இந்திய அரசு நேபாளத்தின் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் ‘சம்ரிதா நேபால் ரா சுகி நேபாளி’ – ‘மகிழ்ச்சி மற்றும் செழிப்பான நேபாளம்’ என்ற வாழ்த்துச் செய்திகளை கூறினார். இந்த கொண்டாட்டங்களில் இந்திய தூதரக ஊழியர்கள் உட்பட நேபாளில் வசிக்கும் இந்திய குடிமக்கள், காத்மண்டுவிலுள்ள இந்திய வர்த்தக சமூகம், ஊடக நபர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com