10% சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% இடஒதுக்கீடு வரம்பை மீறி மத்திய அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மனுதாரர் ‘youth for equality’ என்ற அரசு சாரா அமைப்பை சேர்ந்த ‘கவுஷல் காந்த் மிஸ்ரா’ கூறியதாவது, “We want that this economic quota should get implemented. But it should get implemented within the 50% limit. Because, other backward classes are other backward classes, they are not other backward castes. So, this 10% is a separate class altogether. And it should get integrated with other backward classes only.”
10% இடஒதுக்கீடு மசோதா 165 ஆதரவு வாக்கு மற்றும் 7 எதிர் வாக்குகளுடன் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வித 10% இடஒதுக்கீடு முறையை அமலாக்கப்படுத்தும் இந்த மசோதா அரசியலமைப்பை மீறுவதாகக் இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.