சிலுவையின் வார்த்தை 07:02 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.

II. பரிசுத்தவான்களின் ஆவியைத் தேவன் எடுத்துக் கொள்ளுகிறார்.

  1. ஏனோக்கு.

ஆதியாகமம் 5:23 ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.

எபிரேயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்ட படியினால் அவன் காணப்படாமற் போனான்.

ஏனோக்கு சுமார் முன்னூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். பூமியிலே பிறந்து வாழ்கிற அனைவரும் மண்ணான சரீரத்திலே வாழ்கிறார்கள். ஆவி, ஆத்துமா, சரீரத்திலே பரிசுத்தமாக வாழ்ந்து வருகிறவர்களுக்கு மரணம் நெருங்கி வருகிறபொழுது அவர்களுடைய ஆவியை தேவன் தன்னிடத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால் ஏனோக்கின் சரீரம் என்ன ஆயிற்று என்று குறிப்பிடப்படவில்லை. சரீரத்தில் இருக்கும்பொழுது எவ்வளவு பரிசுத்தமாக வாழ்ந்தாலும் மண்ணான சரீரம் பூமியில் அடக்கம் பண்ணப்பட்டோ அல்லது கண்ணுக்கு தெரியாத இடத்தில் விழுந்துதான் இருக்கும். ஏனென்றால் இயேசு பூமியிலே யோசேப்புக்கும் மரியாளுக்கும் மகனாகப் பிறந்தார். இயேசு பரிசுத்தமாக வாழ்ந்தார். இயேசு பாவத்தை குறித்து சவால் விடுகிறார், “என்னில் பாவமுண்டென்று யார் சொல்லக்கூடும்?” இந்த ஏசுவும் மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். ஆனால் இயேசு மரிக்கும் பொழுது, பிதாவே, என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்படைக்கிறேன் என்றார்.

தொடரும்…

புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை, via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com