திருக்குறள் | அதிகாரம் 2

பகுதி I. அறத்துப்பால்

1.1 அறிமுகம்

1.1.2 வான் சிறப்பு

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.

 

பொருள்:

மழையின் தொடர்ச்சியால் உலகம் இருப்பில் பாதுகாக்கப்படுகிறது; எனவே, மழையை வாழ்வின் அமிர்தமாகப் பார்க்க வேண்டும்.

 

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

 

பொருள்:

மழை மனிதனின் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்து தருவதுடன், பருகுவதற்கு தானே உணவாகவும் விளங்குகிறது.

 

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

 

பொருள்:

மேகம், மழையைத் தடுக்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகில் பசி நெடுங்காலம் துன்பப்படுத்தும்.

 

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

 

பொருள்:

மழை பொழியும் செல்வம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரின் உழைப்பு நின்றுவிடும்.

 

குறள் 15:

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

 

பொருள்:

மழை பெய்யாமல் மனிதர்களை அழிக்கிறது; மற்றும் அப்படி அழிந்தவர்களை மீண்டும் வாழவும் செய்கிறது.

 

குறள் 16:

விசும்பின் துறிவீழின் அல்லாமற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

 

பொருள்:

மேகங்களில் இருந்து ஒரு துளியும் விழவில்லை என்றால், பச்சை புல்லைக் கூட காண்பது அரிது.

 

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

 

பொருள்:

மேகமானது கடல்நீரை மீண்டும் மழையாகப் பெய்யாவிட்டால், பரந்த கடலின் செல்வமும் குறையும்

 

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

 

பொருள்:

மழையானது பெய்யாமல் வறண்டு போனால், இவ்வுலகில் ஆண்டுதோறும் திருவிழாக்களோ, தினசரி வழிபாடுகளோ நடைப்பெறாது.

 

குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

 

பொருள்:

மழை பெய்யவில்லை என்றால், இந்த விசாலமான உலகில் தவம், தான தர்மங்கள் இரண்டும் நிலையாமல் போய்விடும்.

 

குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

 

பொருள்:

தண்ணீர் இல்லாமல் பூமியில் எந்த உயிரினமும் இருக்க முடியாது

மேலும் அந்த நீரின் இடைவிடாத ஓட்டம் மழையின்றி இருக்க முடியாது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com