கோவிட்-19 காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் பழக்கம்
கோவிட்-2019 தொற்றுநோய் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கும், வேலைக்கும் செல்லமுடியாமல் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்ச் 24, 2020 அன்று, இந்திய அரசாங்கம் நாடுமுழுவதும் லாக்டவுனை அறிவித்தது. COVID-2019 தொற்றுநோய் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைத்தது, குறிப்பாக உலகில் கல்வி முறைகளில் பெரிய இடையூறுகளையும் உருவாக்கியது. தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் கோவிட்-19 பூட்டுதல்(Lock down) ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய விளக்கமான கருத்துக்கணிப்பை Suresh N, et. al., (2022) அவர்கள் நடத்தினார். இந்த ஆய்வுக்கான தரவுகளை சேகரிக்க இணைய அடிப்படையிலான கேள்வித்தாள் பயன்படுத்தப்பட்டது. ஆய்வுக்காக பெறப்பட்ட மொத்த பதில்களின் எண்ணிக்கை 464 மற்றும் பதிலளித்தவர்களில் 65.5% பெண்கள் ஆவர். ஆய்வின் மூலம் கோவிட்-19 ஊரடங்கின் போது தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வத்தை வளர்த்துக்கொண்டது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சட்ட கல்லூரி மாணவர்கள் லாக்டவுனின் போது படிக்க மொபைல் போனை (96.8%) பயன்படுத்தியது தெரியவந்தது. சமூக ஊடகங்களின் அதிகப் பயன்பாடு, சோம்பல், வேலை/வீட்டுச் சுமை, ஊக்கமின்மை மற்றும் வளங்களை அணுகாதது உள்ளிட்ட பல சவால்களை மக்கள் லாக்டவுன் காலத்தில் எதிர்கொண்டதாகக் காட்டப்பட்டது. கோவிட்-19 பூட்டுதல் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சட்ட மாணவர்களின் சட்டக் கல்வியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சட்ட மாணவர்களின் சட்டக் கல்வியைப் புரிந்துகொள்ளவும், எதிர்கால படிப்புகளுக்கான பரிந்துரைகளை வழங்கவும் உதவும் என்று முடிவு செய்யப்பட்டது.
References:
- Thanuskodi, S. (2022). A Survey On Reading Habit Of Law Students In Tamil Nadu During Covid-19: A Case Study.
- Ng, T. K., Reynolds, R., Chan, M. Y. H., Li, X. H., & Chu, S. K. W. (2020). Business (teaching) as usual amid the COVID-19 pandemic: A case study of online teaching practice in Hong Kong. Journal of Information Technology Education. Research, 19, 775.
- Xie, Z., & Yang, J. (2020). Autonomous learning of elementary students at home during the COVID-19 epidemic: A case study of the second elementary school in Daxie, Ningbo, Zhejiang Province, China. Ningbo, Zhejiang Province, China (March 15, 2020).
- Nguyen, H. T. T. (2021). Boosting Motivation to Help Students to Overcome Online Learning Barriers in Covid-19 Pandemic: A Case Study. International Journal of Interactive Mobile Technologies, 15(10).
- König, A., & Dreßler, A. (2021). A mixed-methods analysis of mobility behavior changes in the COVID-19 era in a rural case study. European Transport Research Review, 13(1), 1-13.