தொழில்துறை பகுதியில் குரோமியம் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய நிலத்தடி நீரின் தரம்
நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது இது தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடாகவும் மாறியுள்ளது. ராணிபேட்டையில் உள்ள தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாட்டின் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் மனித வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குரோமியம் அடிப்படையிலான இரசாயனங்கள் உற்பத்தி செய்யும் ராணிபேட்டையின் தொழிற்துறைப் பகுதியில் இருந்து நாற்பது நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பிடுவதற்கும், மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், பெரியவர்களுக்காக USEPA உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தப்பட்டது. WQI(water quality index) வரம்பின்படி (இது தண்ணீரின் தரம் நல்லதா, நியாயமானதா அல்லது மோசமானதா என்பதைக் குறிக்கிறது), நிலத்தடி நீர் மாதிரிகளில் 50% க்கும் அதிகமானவை மோசமான வகையைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கனஉலோகம் குரோமேட்டின் செறிவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியது, அதாவது 0.05 mg/l. ஆய்வுப் பகுதியில் உள்ள பெரியவர்களின் நிலத்தடி நீரின் நாள்பட்ட தினசரி உட்கொள்ளல் Cr>Fe>Pb>Cd என்ற வரிசையில் இருப்பது கண்டறியப்பட்டது. இது நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. இவ்வாறு உட்கொள்வதன் மூலம் குரோமியம் உட்கொள்ளல் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, புற்றுநோயை உருவாகும் ஆபத்து அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வின் முடிவுகள், பிராந்திய நிலையான நிலத்தடி நீர் மேலாண்மை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
References:
- Vijayakumar, C. R., Balasubramani, D. P., & Azamathulla, H. M. (2022). Assessment of groundwater quality and human health risk associated with chromium exposure in the industrial area of Ranipet, Tamil Nadu, India. Journal of Water, Sanitation and Hygiene for Development, 12(1), 58-67.
- Ullah, R., Malik, R. N., & Qadir, A. (2009). Assessment of groundwater contamination in an industrial city, Sialkot, Pakistan. African Journal of Environmental Science and Technology, 3(12).
- Li, P., Wu, J., Qian, H., Lyu, X., & Liu, H. (2014). Origin and assessment of groundwater pollution and associated health risk: a case study in an industrial park, northwest China. Environmental Geochemistry and Health, 36(4), 693-712.
- Rao, G. T., Rao, V. V. S., Ranganathan, K., Surinaidu, L., Mahesh, J., & Ramesh, G. (2011). Assessment of groundwater contamination from a hazardous dump site in Ranipet, Tamil Nadu, India. Hydrogeology Journal, 19(8), 1587-1598.
- Tirkey, P., Bhattacharya, T., Chakraborty, S., & Baraik, S. (2017). Assessment of groundwater quality and associated health risks: a case study of Ranchi city, Jharkhand, India. Groundwater for sustainable development, 5, 85-100.