கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் குறுக்கே சாலைப் பாலங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மேம்பாலங்கள் தான் தற்போது மக்கள் விரைந்து செல்ல ஒரே தீர்வாக உள்ளது.ஆனால்,  இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைப் பாலங்கள் வாகனச் சுமைகளுக்கும் அவற்றின் வேகத்துக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. புதிய பாலங்களை கட்டுவது நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், பாலங்களின் கட்டமைப்பு சுகாதார கண்காணிப்பு (SHM-Structural Health Monitoring) மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் உதவும். சென்னை நகரில், பல சாலைப் பாலங்கள் உள்ளன. அவைகளில் பல ஒரு காலத்தில் செயல்பட்டன. ஆனால், தற்போது பாதுகாப்பான பொது பயன்பாட்டிற்கு SHM தேவை. கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் குறுக்கே பல்வேறு மண்டலங்களில் கட்டப்பட்டுள்ள சாலைப் பாலங்களில் SHM இன் அவசியத்தை 2022ம் ஆண்டு A. Rose Enid Teresa, et. al., அவர்களின் கட்டுரை விளக்குகிறது. மேலும் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள RCC சாலைப் பாலம் தொடர்பான வழக்கு ஆய்வையும் விளக்குகிறது.

ஆய்வில் பாலத்தின் ஒரு இடைவெளியில் நேரடி சுமை சோதனை நடத்தப்பட்டது. பாலத்தின் பகுப்பாய்வு ரீதியாக ஆராயப்பட்ட மாதிரியிலிருந்து பெறப்பட்ட திரிபு வரலாறுகள் பல அளவிடப்பட்ட திரிபு தரவுகளுடன் ஒப்பிடப்பட்டன. மேலும், உத்தரங்களின் பயனுள்ள விறைப்புத் தன்மையை அளவிட மாதிரியில் தேவையான மேம்பாடுகள் செய்யப்பட்டன. இதில், பொதுப் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான சேவைத்திறனை உறுதிசெய்யும் வகையில், பாலத்தின் உதிரிபாகங்களின் மறுசீரமைப்பு பயன்பாடுகள் குறித்த பரிந்துரைகளை வழங்க உதவியுள்ளது. இதனால், சாலைப் பாலங்களின் SHM கட்டமைப்பின் ஆயுளை அதிகரிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு பொதுமக்களுக்கு சேவை செய்யும்.

References:

  • Rose Enid Teresa, A., Stella, S., Goutham Priya, M., Gajalakshmi, P., & Revathy, J. (2022). Road Bridges Across Cooum and Adyar Rivers in Chennai City—Need for Structural Health Monitoring. In Advances in Construction Materials and Sustainable Environment(pp. 281-294). Springer, Singapore.
  • Ko, J. M., & Ni, Y. Q. (2005). Technology developments in structural health monitoring of large-scale bridges. Engineering structures27(12), 1715-1725.
  • Pines, D., & Aktan, A. E. (2002). Status of structural health monitoring of long‐span bridges in the United States. Progress in Structural Engineering and materials4(4), 372-380.
  • Ansari, F. (Ed.). (2005). Sensing issues in civil structural health monitoring(Vol. 1, p. 527). Dordrecht: Springer.
  • Mufti, A. A. (2002). Structural health monitoring of innovative Canadian civil engineering structures. Structural health monitoring1(1), 89-103.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com