தென்னை பயிர்கள் மீது காலநிலை மாறுபாடு பாதிப்புகள்

இந்தியாவின் தேங்காய் பயன்பாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு  தேங்காய் தோட்ட உற்பத்தியாளர்களின் பங்கு இன்றியமையாதது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு, தமிழ்நாட்டின் காலநிலைகளுக்கும் உறுதியான சம்மந்தம் உள்ளது. தற்போது, ​​பருவநிலை மாறுபாடு தென்னை உற்பத்தி  நிலையை மோசமாக்குகிறது. தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் தென்னை உற்பத்தியில் ஏற்படும் காலநிலை மாறுபாடு பாதிப்புகளை புவியியல் தொழில்நுட்பங்களைப் மூலம் Ganeshkumar B, et. al., (2022) அவர்களின் ஆய்வு இடஞ்சார்ந்த மதிப்பீட்டை செய்கிறது. இந்த ஆய்வு 2005 முதல் 2014 வரையிலான காலநிலை அளவுருக்கள் மற்றும் தேங்காய் உற்பத்தி புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மொத்த பரப்பளவான 1,39,415 ஹெக்டேர் பரப்பளவில் கிராமப்புறங்களில் 4,488.16 ஹெக்டேர் தென்னந்தோப்புகளை ஆய்வு செய்யப்பட்டது.

2009-2013 ஆண்டுகளில் அதிகரித்த வெப்பநிலை மற்றும் மோசமான மழைப்பொழிவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. அதன் தாக்கம் தேங்காய் உற்பத்தியின் பக்கம் திரும்பியது. LISS III, IV மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களைப் பயன்படுத்தி இடஞ்சார்ந்த சேத மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. 2010-2014-இன் தேங்காய் உற்பத்தியின் ஆண்டுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு பருவகால மழைப்பொழிவு மற்றும் கடுமையான கோடைக்கால காற்றின் வெப்பநிலையின் தொடர்ச்சியான குறைவு காரணமாக ஏற்படும் பிறழ்வுகளுக்கு சாட்சியமளிக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த போக்கு தென்னை மரங்களின் உயிர்களைக் கொன்றது. காலநிலையும் உற்பத்தியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், தென்னை உயிர்கள் இழப்பதால் கிராமப்புறப் பொருளாதாரத்தின் அழிவை மீட்டெடுக்க முடியாது என்றும் முடிவுகள் காட்டுகின்றன.

References:

  • Ganeshkumar, B., & GVT, G. K. (2022). Spatial assessment of climate variability effects on coconut crops in Tamil Nadu State—a case study. Theoretical and Applied Climatology, 1-9.
  • Peiris, T. S. G. (2008). Assessment of climate variability for coconut and other crops: A statistical approach. CORD24(1), 19-19.
  • Boissière, M., Locatelli, B., Sheil, D., Padmanaba, M., & Sadjudin, E. (2013). Local perceptions of climate variability and change in tropical forests of Papua, Indonesia. Ecology and Society18(4).
  • Peiris, T. S. G., Wijeratne, M., Ranasinghe, C. S., Aanadacumaraswamy, A., Fernando, M., Jayakody, A., & Ratnasiri, J. (2004, November). Impact of climate change on coconut and tea industry in Sri Lanka. In 2nd AIACC regional workshop for Asia and the Pacific, Manila, the Philippines(pp. 2-5).
  • Peiris, T. S. G., & Thattil, R. O. (1998). The study of climate effects on the nut yield of coconut using parsimonious models. Experimental Agriculture34(2), 189-206.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com