சமையலறை கழிவுகளில் இருந்து உயிரிவாயு
உலகெங்கிலும், நடைபெறக்கூடிய ஆராய்ச்சி பணிகள் எரி ஆற்றல் துறைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனென்றால், வரவிருக்கும் ஆண்டுகளில், மனித வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் எரி ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும். மரபுவழி ஆற்றல் உற்பத்தியானது புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து(fossil fuels) ஆற்றல் உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக மாற்றுவதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை மையப்படுத்துகின்றனர். சமையலறைக் கழிவுகளிலிருந்து வரும் உயிரிவாயு என்பது ஆற்றல் உற்பத்தியின் ஒரு வடிவமாகும். இது காற்றில்லா செரிமானம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. காற்றில்லா செரிமானத்தின் சமையலறைக் கழிவுகளிலிருந்து வரும் இறுதிப் பொருள் உயிரிவாயு ஆகும். இதில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது. சோடியம் ஹைட்ராக்சைடைப் பயன்படுத்துவதன் மூலம் காற்றில்லா செரிமான செயல்முறையின் காரத்தன்மையை (pH = 7) பராமரிக்க முடியும். இந்தியா நாடு, தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள, ஸ்டெல்லா மேரீஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள M. Sivaprakash, et. al., அவர்கள் 2022ல் மேற்கொண்ட ஆய்வில், இந்த வகையான ஆற்றல் உற்பத்தியை மதிப்பிடுவதற்கு, அடிப்படை வடிவமைப்புடன் ஒரு மாதிரி உருவாக்கப்பட்டு வளாகத்தில் செயல்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
References:
- Sivaprakash, M., Kumar, S. R., Jegan, C. D., & Rakhesh, J. P. (2022, January). Analysis of bio-gas from kitchen waste. In AIP Conference Proceedings(Vol. 2385, No. 1, p. 090001). AIP Publishing LLC.
- Subramani, T., & Nallathambi, M. (2012). Mathematical model for commercial production of bio-gas from sewage water and kitchen waste. International Journal of Modern Engineering Research (IJMER), 2(4), 1588-95.
- Sorathia, H. S., Rathod, P. P., & Sorathiya, A. S. (2012). Bio-gas generation and factors affecting the bio-gas generation–a review study. International Journal of Advanced Engineering Technology, 3(2).
- Chen, G., Liu, G., Yan, B., Shan, R., Wang, J., Li, T., & Xu, W. (2016). Experimental study of co-digestion of food waste and tall fescue for bio-gas production. Renewable energy, 88, 273-279.
- Prabhahar, R. S. S., & Vignesh, N. (2016). Enhancing bio-gas production from kitchen waste using BSA-iron oxide nanoparticles in miniature level bio-reactor. Journal of Achievements in Materials and Manufacturing Engineering, 78(2), 71-77.