பட்டாம்பூச்சிகள் பற்றிய ஆய்வு

தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் வண்ணத்துப்பூச்சிகளின் பன்முகத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  அக்டோபர் 2019 முதல் ஜனவரி 2020 வரையிலான ஆய்வுக் காலத்தில் 264 பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. மொத்தம் 22 பட்டாம்பூச்சிகளின் இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், மிகவும் மேலாதிக்க குடும்பமாக Nymphalidae (45.45%) உள்ளது. அதைத்தொடர்ந்து, Pieridae (31.82%), Papilionidae (13.64%), மற்றும் Lycaenidae (9.1%) ஆகிய வகைகள் உள்ளன. ஆராய்ச்சி நடக்கும்பொழுது, மற்ற குடும்பங்களுடன் ஒப்பிடும்போது Nymphalidae குடும்பத்தின் கீழ் தொகுக்கப்பட்ட போது அதிகபட்ச எண்ணிக்கையில் பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மாதத்தில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  ​​

பட்டாம்பூச்சிகளின் இருப்பு மற்றும் இல்லாமை பொதுவான (C-Common) ஆகவும், எப்போதாவது (O- Occasional), அரிதான (R- Rare), மற்றும் மிகவும் அரிதான (VR- Very Rare) என்று பதிவு செய்யப்பட்டது. பொதுவான இனங்கள் (72.7 சதவீதம்)-ஆகவும், அதைத் தொடர்ந்து அவ்வப்போது வருபவை (4.5 சதவீதம்) எனவும், அரிதானது (18.18 சதவீதம்), மற்றும் மிகவும் அரிதானது (VR) (4.5 சதவீதம்)  எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் மிகவும் பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தது, ஜனவரி மாதம் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

References:

  • Saravanan, N., & Venkatramalingam, K. (2021). A preliminary study of butterflies in Theerthamalai, Tamil Nadu.
  • Prabakaran, S., Chezhian, Y., Evangelin, G., & William, S. J. (2014). Diversity of Butterflies (Lepidoptera: Rhopalocera) In Tiruvallur District, Tamil Nadu, India. Biolife2(3), 769-778.
  • Daniel, J. A., Sankararaman, H., & Hegde, D. R. (2018). Butterfly diversity in Tamil Nadu agricultural university campus, Coimbatore, Tamil Nadu, India. Journal of Entomology and Zoology Studies6(4), 1354-1361.
  • Arun, P. R. (2003). Butterflies of Siruvani forests of Western Ghats with notes on their seasonality. Zoos’ Print Journal18(2), 1003-1006.
  • Sharmila, E. J., & Thatheyus, A. J. (2013). Diversity of butterflies in Alagarhills, Tamil Nadu, South India. Current Biotica6(4), 473-479.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com