கோலாலம்பூரில் உள்ள சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளர்களிடையே HIV பராமரிப்பு தொடர்ச்சி

மலேசியாவில் சுமார் 37,000 சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர் என்று கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். HIV உள்ளவர்களுக்கு மலேசியா விலையற்ற ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART- Antiretroviral therapy) அளித்தாலும், HIV பராமரிப்பு தொடர்ச்சியில் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபடுவது பற்றி அதிகம் அறியப்படவில்லை. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பாலியல் தொழிலாளர்களிடையே HIV பாதிப்பு குறித்து பதிலளித்தவர்களில் உந்துதல் மாதிரியைக்கொண்டு Yerina S. Ranjit, et. al. (2021) அவர்களின் ஆய்வு அமைந்திருந்தது. இதில், 57 HIV பாதிக்கப்பட்ட சிஸ்ஜெண்டர் பெண்கள் (n = 33) மற்றும் திருநங்கைகள் (n = 24) பாலியல் தொழிலாளர்களிடமிருந்து தரவானது பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தது. புதிதாக HIV நோயால் கண்டறியப்பட்ட பெண்களின் விகிதாச்சாரத்தை ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

அடிப்படை CD-4 எண்ணிக்கை சோதனை செய்து, ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் (ART) தொடங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 26.3% மட்டுமே HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 60% பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர். சிஸ்ஜெண்டர் (15.2%) மற்றும் திருநங்கைகள் (12.5%) பெண்களில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தற்போது ART எடுத்து வருகின்றனர். HIV பராமரிப்பு தொடர்ச்சியில் பாலியல் தொழிலாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான தலையீடுகள் அவசரமாக தேவை. HIV பராமரிப்பில் இணைப்பு மற்றும் தக்கவைப்பை மேம்படுத்துவதற்கான ஆதார அடிப்படையிலான உத்திகளைப் பயன்படுத்துதல் இந்த முக்கிய மக்கள்தொகையின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்ருந்தது.

References:

  • Ranjit, Y. S., Gibson, B. A., Altice, F. L., Kamarulzaman, A., Azwa, I., & Wickersham, J. A. (2021). HIV care continuum among cisgender and transgender women sex workers in Greater Kuala Lumpur, Malaysia. AIDS care, 1-7.
  • Poteat, T., Hanna, D. B., Rebeiro, P. F., Klein, M., Silverberg, M. J., Eron, J. J., & Althoff, K. N. (2020). Characterizing the human immunodeficiency virus care continuum among transgender women and cisgender women and men in clinical care: a retrospective time-series analysis. Clinical Infectious Diseases70(6), 1131-1138.
  • Beckwith, C. G., Kuo, I., Fredericksen, R. J., Brinkley-Rubinstein, L., Cunningham, W. E., Springer, S. A., & Biggs, M. L. (2018). Risk behaviors and HIV care continuum outcomes among criminal justice-involved HIV-infected transgender women and cisgender men: data from the seek, test, treat, and retain harmonization initiative. PloS one13(5), e0197730.
  • Sandfort, T. G., Dominguez, K., Kayange, N., Ogendo, A., Panchia, R., Chen, Y. Q., & Eshleman, S. H. (2019). HIV testing and the HIV care continuum among sub-Saharan African men who have sex with men and transgender women screened for participation in HPTN 075. PLoS One14(5), e0217501.
  • Kalichman, S. C., Hernandez, D., Finneran, S., Price, D., & Driver, R. (2017). Transgender women and HIV-related health disparities: falling off the HIV treatment cascade. Sexual health14(5), 469-476.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com