திருமணமான கிராமப்புற பெண்களிடையே இனப்பெருக்க பாதையில் தொற்று தொடர்பான ஆரோக்கியம்

இனப்பெருக்க பாதை தொற்று (RTI-Reproductive tract infection) என்பது இனப்பெருக்க பாதையில் ஏற்படும் தொற்று ஆகும். அறிகுறிகளை தெரிவிப்பதிலும், சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதிலும் உள்ள தயக்கத்தால், குறிப்பிடத்தக்க அளவில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெண்களின் உடல்நலம் தேடும் நடவடிக்கைகள் அந்த சமூகத்தில் நோயின் கவனத்தையும் சுகாதார வசதியின் போதாமையை பிரதிபலிக்கிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் RTI-க்கான அதிக ஆபத்துள்ள குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பெண்களின் இனப்பெருக்கப் பாதை நோய்த்தொற்று குறித்த சுகாதாரப் பாதுகாப்பு தேடும் நடத்தையை மதிப்பிடும் நோக்கத்துடன் B Surya, et. al., (2021) அவர்களின் ஆய்வு நடத்தியுள்ளார். முதன்மை பராமரிப்பு மருத்துவர்கள் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், ஆரோக்கியம், நடைமுறையை மதிப்பிடுவதில் முன்னேற்றம் மற்றும் முடிவெடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவுகிறது.

செங்கல்பட்டில் செட்டிநாடு மருத்துவமனையின் கிராமப்புற களப் பயிற்சிப் பகுதியில் சமூகம் சார்ந்த இனப்பெருக்க பாதை தொற்று ஆய்வு நடத்தப்பட்டது. 330 மாதிரி அளவு பல-நிலை சீரற்ற மாதிரி அளவு முறையில் சேகரிக்கப்பட்டன. RTI/STI இல் DLHS-4 இன் தரப்படுத்தப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி தரவுகளும் சேகரிக்கப்பட்டன. MS-EXCEL இல் தரவு உள்ளிடப்பட்டு SPSS பதிப்பு 21 ஐப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் விளக்கப்பட்டன.

RTI- இன் பரவலானது 50.3% என்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களில் 60.8% பேர் வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி  சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது. சிகிச்சை தேடும் நடத்தை, வயது மற்றும் சமூக பொருளாதார நிலை (P- <0.05) ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள இனப்பெருக்க வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு RTI-யின் அறிகுறிகள் குறித்து வழக்கமான சுகாதாரக் கல்வி வழங்கப்படுவதோடு, தகுந்த சிகிச்சையைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

References:

  • Surya, B., Shivasakthimani, R., Muthathal, S., Prakash, B., Loganathan, S., & Ravivarman, G. (2021). A cross-sectional study on health-seeking behavior in relation to reproductive tract infection among ever-married rural women in Kancheepuram district, Tamil Nadu. Journal of Family Medicine and Primary Care10(9), 3424.
  • Mani, G. (2014). Prevalence of reproductive tract infections among rural married women in Tamil Nadu, India: A community based study. Prevalence4(1).
  • Gopalakrishnan, S., Eashwar, V. A., Kumar, P. M., & Umadevi, R. (2019). Reproductive health status of rural married women in Tamil Nadu: A descriptive cross-sectional study. Journal of family medicine and primary care8(11), 3607.
  • Hegde, S. K., Agrawal, T., Ramesh, N., Sugara, M., Joseph, P. M., Singh, S., & Thimmaiah, S. (2013). Reproductive tract infections among women in a peri-urban under privileged area in Bangalore, India: Knowledge, prevalence, and treatment seeking behavior. Annals of Tropical Medicine & Public Health6(2).

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com