தமிழ் இந்து திருமணங்களின் கலாச்சார கருத்தாக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் உள்ள தமிழ் இந்து சமூகத்தினரிடையே திருமணத்தின் கலாச்சார கருத்தாக்கத்தை ஆராய்கிறது Shanmuganathan, T., et. al., (2021) அவர்களின் ஆய்வின் மையக்கரு. திருமணத்தின் இந்து கலாச்சாரத் திட்டம் உடல், சமூகம் மற்றும் ஆன்மீக அம்சங்களுடன் தொடர்புடையது.  மேலும், மொழி சமூகத்தின் கலாச்சார அறிவாற்றலின் மைய அம்சமாக செயல்படுகிறது. தரவு பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது, குறிப்பாக குழு விவாதங்கள், இந்து புனித நூல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் (வேதாந்தா) மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

திருமண சடங்குகள் பல்வேறு கலாச்சார திட்டங்களைக் காட்டுகின்றன.  குறிப்பாக வேத ஜோதிடம், புனித அழைப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் ஆகியவை ஆகும்.  அவை சமூக உறுப்பினர்களிடையே அறிவைப் பகிர்ந்து கொள்கின்றன. வேதாந்தத்தில் நிறுவப்பட்ட திருமணத்தின் (அல்லது விவாஹா) கலாச்சாரத் திட்டம் திருமணத்தை ஒரு மதக் கடமையாக (தர்மம்) கருதுகிறது. சமூக தொடர்புகளின் போது திருமணத்துடன் தொடர்புடைய கலாச்சார உருவகங்கள் விவாதிக்கப்படுகின்றன. திருமணம் ஆயிர காலத்துப்பயிராகவும், திருமணம் ஒரு பயணமாகவும் தமிழ் இந்து சமூகத்தின் பாரம்பரிய உலகப் பார்வையை விளக்கும் உருவக வெளிப்பாடுகள் ஆகும்.

References:

  • Shanmuganathan, T. (2021). Cultural Conceptualization of Tamil Hindu Marriages. International Journal of Language and Culture.
  • Shenkar, O. (2001). Cultural distance revisited: Towards a more rigorous conceptualization and measurement of cultural differences. Journal of international business studies32(3), 519-535.
  • Khajeh, Z. (2012). Persian culinary metaphors: a cross-cultural conceptualization. GEMA Online® Journal of Language Studies12(1).
  • Guerrero, L., Claret, A., Verbeke, W., Vanhonacker, F., Enderli, G., Sulmont-Rossé, C., & Guàrdia, M. D. (2012). Cross-cultural conceptualization of the words Traditional and Innovation in a food context by means of sorting task and hedonic evaluation. Food Quality and Preference25(1), 69-78
  • Hanna, J. L. (2010). Toward a cross-cultural conceptualization of dance and some correlate considerations. In The Performing Arts(pp. 17-46). De Gruyter Mouton..

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com