சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.
சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.
1. இயேசு யார்?
பிதாவாகிய தேவன், இயேசுவின் மனுஷ குமாரனாக இந்த பூமிக்கு அனுப்பினார். வேதவாக்கியங்களின்படி பெத்லேகேமில் பிறந்த இயேசுவை எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்வதற்காக, யோசேப்பும் மரியாளும் எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு வந்தார்கள். நசரேயன் என்று அழைக்கப்பட்ட இயேசு நாசரேத் என்னும் ஊரில் வளர்ந்தார். முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். பரிசுத்த ஆவியானவர் புறாவை போல் இயேசுவின் மேல் இறங்கினார். மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று ராஜ்யத்தின் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு அறிவித்தார். கலிலேயாக் கடற்கரைப் பட்டணங்களிலும் கிராமங்களிலும் சுற்றித்திரிந்து தாம் சந்தித்த ஜனங்களுக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். தம்மோடிருந்து ஊழியஞ் செய்வதற்காக பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்தெடுத்தார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Petar Milošević [CC BY-SA 4.0], via விக்கிமீடியா காமன்ஸ்.