பலி
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று பதினேழில், தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்கொண்ட ஆவிதான். தேவனே! நொறுங்கொண்டதும், நறுங்கொண்டதுமான இதயத்தை புறக்கணியும். இது தாவீதுனுடைய இன்னொரு ஜெபம். உத்தம மனஸ்தாபத்தோடுகூட ஆண்டவரை நோக்கி மன்றாடி ஏறெடுத்த ஒரு ஜெபம். தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்கொண்ட ஆவிதான். பலிகளினால்தான் பாவம் பரிகரிக்கப்பட வேண்டும். பலிகள் செலுத்தி இரத்தம் சிந்தி, இரத்தத்தினால் இந்த பாவம் மன்னிக்கப்பட வேண்டும். ஆனால் இத்தாவீது அதைவிட மேலான ஒரு காரியத்தை சுட்டி காட்டுகின்றான்.
பலிப்பொருள் ஆட்டு குட்டியாகவோ, ஆட்டுகடாவாகவோ அல்லது ஒரு பெரிய மாடாகவோ இருக்க வேண்டுமென்று நாம் எண்ண வேண்டியதில்லை. பொருளிலே அல்ல, பொருளின் தன்மையிலே அல்ல உத்தம மனஸ்தாபத்திலே இருக்கிறது என்று சொல்லி சுட்டிக் காட்டுகின்றான். ஆண்டவர் அந்த பலியைத்தான் விரும்புகின்றார். நாம் கொண்டு வந்து படைக்கிற அந்த பலிப்பொருளை அல்ல, இருதயத்திலே நாம் கொண்டிருக்கிற எண்ணம். அந்த உத்தம மனஸ்தாபம் நாம் செய்த பாவக்கிரியைகளுக்காக உள்ளம் நொறுங்கி இருதயத்திலே நொறுங்கி அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டிக்கொள்கிற அந்த சுபாவத்தைதான் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். அந்த நொறுங்கொண்ட ஆவிதான் பலி. அதுதான் பரிகாரத்தை கொண்டுவரும், அதுதான் நமக்கு இரட்சிப்பை கொண்டுவரும்.
தேவனே! நொறுங்கொண்டதும் நறுங்கொண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியும். எனக்கு அந்த இருதயத்தை தாரும். நான் பாவம் செய்தேன். அக்கிரமம் செய்தேன், அநியாயம் செய்தேன், உம்மை வேதனைப்படுத்தினேன். உம்மை அவமானப்படுத்தினேன், உம்மை பரிகாசம் பண்ணினேன். உம்முடைய ஜனங்களையும் நான் அவமானப்படுத்தினேன். இந்த வேளையிலே நான் மனஸ்தாபப்படுகிறேன். நெறுங்கொண்ட என்னுடைய இருதயத்தை உமக்கு முன்பாக அற்பணிக்கிறேன். என் ஆவியை நான் பலியாக நான் ஒப்புகொடுக்கிறேன். என்னை மன்னிப்பீராக. இரக்கம் பாராட்டுவீராக. கிருபை செய்வீராக. இந்த பலியை நீர் அங்கீகரிப்பீராக.
பரிசுத்தமுள்ள ஆண்டவர் எம்முடைய நொறுங்கொண்ட நறுங்கொண்ட இருதயத்தை நீர் அங்கீகரிப்பீராக. எனக்கு வேண்டிய சமாதானத்தை கொடுத்து என்னை சமாதானப்படுத்துவீராக. உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்று சொன்ன ஆண்டவர் உம்முடைய வல்லமையுள்ள கரத்தினால் என்னை தாங்குவீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்