வாஞ்சை
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு ஒன்றில் மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல, தேவனே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்து கதறுகிறது. தாவீதுனுடைய வாஞ்சையை நாம் பார்க்கிறோம். அவனுடைய மனவிருப்பத்தை நாம் இங்கே பார்க்கிறோம். வனாந்தரத்திலே மேய்ந்து கொண்டிருக்கிற ஒரு மான் வறட்சியான சூழ்நிலையிலே தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அது அலைந்து திரிகிறது. காடுகளிலே, மலைகளிலே ஓடி திரிந்து தண்ணீர் கிடைக்குமா என்றுச் சொல்லி கதறித் திரிகிறது. தாகத்தினால் மடிந்துபோகக் கூடிய ஒரு சூழ்நிலையிலே அது பரிதாபத்தோடுகூட குரல் எழுப்புகிறது. அதைபோன்று தாவீது தன்னை சொல்கின்றான். என் ஆத்மா உன்னை வாஞ்சித்து கதறுகிறது.
ஆண்டவரே! நான் எப்போது உம்முடைய சத்தம் கேட்பேன். ஆண்டவரே! எப்போது நீர் எனக்கு உதவி செய்வீர். ஆண்டவரே! நீர் எப்போது எனக்கு விடுதலை தருவீர். என் கண்ணீரை துடைக்கமாட்டிரா? என் வியாதியை என்னிலிருந்து எடுத்து போடமாட்டிரா? சத்ருக்களுடைய கரங்களிலிருந்து என்னை விடுவிக்கமாட்டிரா? எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டிருக்கிறேனே, எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை. ஆண்டவரே! உம்மையே நோக்கி பார்க்கிறேன், உம்மையே நோக்கி பார்க்கிறேன். நீர் எனக்கு மனதிறங்குவீராக. நீர் என்னுடைய சத்தத்திற்கு செவி சாய்ப்பீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! இவ்விதமான நெருக்கங்களிலே நாங்கள் கதறி அழுகிறவர்களாக காணப்படுகிறோம். மனிதர்களால், உறவினர்களால், பெந்து ஜனங்களால் நாங்கள் கைவிடப்படுகிறபொழுது, ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி கதறி அழுது ஜெபிக்கிறோம். நீர் எங்களுக்கு உதவி செய்வீராக.
நாங்கள் யாரிடத்திலே போவோம்? யாடரிடத்திலே எங்களுடைய மன்றாடலை சொல்லுவோம்? யார் எங்களுடைய விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்க முடியும்? யார் எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? எந்த மனிதனாலும் முடியாது. சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக. வானத்தையும், பூமியையும் படைத்த தேவன் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுடைய பிரச்சனைகளை எடுத்து போட்டு, எங்களுடைய கவலை கண்ணீரை மாற்றி, என்னை சந்தோஷப்படுத்துவீராக. உம்முடைய தயவுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இப்போது உம்மை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டிருக்கிற உண்மையான சகோதரர் மற்றும் சகோதரிகளுடைய ஜெபத்தை நீர் கேட்பீராக. எங்களுடைய நெருக்கங்கள் உமக்கு தெரியும், எங்களுடைய கவலைகள் உமக்கு தெரியும். அவர்கள் எப்பக்கத்திலும் ஆபத்திலே சூழ்ந்து இருக்கிறார்கள் கர்த்தாவே! நீர் அவர்களை உம்முடைய வல்ல கரம் கொண்டு விடுவிப்பீராக. அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்