குணமாக்குபவர்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்தி ஒன்று நான்கில், கர்த்தாவே! நீர் என்மேல் இரக்கமாய் இரும். உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன், ஆத்மாவை குணமாக்கும். உமக்கு விரோதமாக பாவம் செய்தேன், என் ஆத்மாவை குணமாக்கும். இது தாவீதுனுடைய ஒரு உண்மையான ஜெபம். அது மனதுருக்கம் உள்ள ஒரு ஜெபம். நான் பாவம் செய்தேன்.
கர்த்தாவே! நான் உன்னுடைய கட்டளைகளை மீறிவிட்டேன். உம்முடைய பிரமாணங்களின்படி நான் நடக்கவில்லை. உம்முடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் நான் அல்லல் தட்டிவிட்டேன். நான் மீறிவிட்டேன். உமக்கு முன்பாக நான் குற்றமுள்ளவனாக காணப்படுகிறேன். பாவம் செய்கிற ஆத்மா சாகும். பாவத்தின் சம்பளம் மரணம். அது எனக்கு நிச்சயமாக வரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆண்டவரே நீர் மன்னிக்கிறதிலே தயவு பெருத்தவராக இரக்கம் நிறைந்தவராக காணப்படுகிறீர். நான் உமக்கு முன்பாக என்னை அறிக்கையிடுகிறேன்.
என்னுடைய நீடுதல்களை அறிக்கையிடுகிறேன். என் பாவத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். என்னை மன்னிப்பீராக. என் ஆத்மா பாவத்தினால் செத்து போகக்கூடாது. அழிந்து போகக் கூடாது. உம்முடைய இரத்தத்தினால் என்னுடைய ஆத்மாவைக் கழுவும். என்னை சுத்தமாக்கும். என்னை பரிசுத்தமாக்கும். என்னை உயிர்ப்பியும். உமக்கு உகந்த பாத்திரமாக என்னை மாற்றும். கர்த்தாவே! உம்முடைய கோபத்தை அல்ல, உம்முடைய இரக்கத்தையே எனக்கு காட்டுவீராக. உம்முடைய தயையுள்ள கரம் என்னை அரவணைத்துக் கொள்ளட்டும். திகையாதே! கலங்காதே! நான் உன் தேவன், நான் உன்னோடுகூட இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் என்னை பலப்படுத்துவீராக. என்னை பரிசுத்தப்படுத்தி காத்துக் கொள்வீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி நாங்கள் கெஞ்சி நிற்கிறோம் கர்த்தாவே! எம்முடைய எல்லா நீடுதல்களையும், எல்லா அக்கிரமக்கிரியைகளையும், எல்லா பொல்லாத செயல்பாடுகளையும் உமக்கு முன்பாக நாங்கள் அறிக்கையிடுகிறோம். மன்னிப்பீராக. உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எங்களை கழுவி சுத்தப்படுத்துவீராக. எம்முடைய ஆவி ஆத்மா சரீரம் பாவத்தினால் அழிந்துபோகாதப்படி காத்துக்கொள்வீராக. உமக்கு உகந்த பாத்திரமாக எம்மை மாற்றுவீராக. பெரிய காரியங்களை செய்யும். கர்த்தாவே! இந்த வேளையிலும் பாரத்தோடு கண்ணீரோடு உம்மை நோக்கி வேண்டிக்கொண்டிருக்கிற எந்தவொரு சகோதரனையும் சகோதாயையும் நீர் ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்தி காத்துக் கொள்வீராக. உம்முடைய கிருபையின் கரம் எங்களோடுகூட இருக்கட்டும். பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்