வழக்கு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம்.  சங்கீதம் முப்பத்தைந்து ஒன்றில், கர்த்தாவே! நீர் என் வழக்காளிகளோடு வழக்காடி என்னோடு யுத்தம் பண்ணுகிறவர்களோடு யுத்தம் பண்னும்.  தாவீது ஆண்டவருடைய உதவியை தேடுகிறான்.  அவருடைய கரத்தினுடைய நன்மையை தனக்கு கட்டளையிட வேண்டும் என்று விரும்புகிறான்.  ஆண்டவருக்கு முன்பாக நான் பலவீனனென்றும் ஒன்றும் செய்ய இயலாதவன் என்றும் அவன் தன்னை அறிக்கையிடுகிறதை நாம் பார்க்கிறோம்.

நீர் என் வழக்காளிகளோடே வழக்காடும் அறிவினாலும் அல்ல, ஞானத்தினாலும் அல்ல, எந்த அனுபவத்தினாலும் அல்ல அவருடைய கிருபையைத் தேடுகிற தாவீதை பார்க்கிறோம்.  இது ஒரு நல்ல அணுகுமுறை. ஆண்டவரை சார்ந்துக்கொள்ளுகிற ஒரு காரியம்.  சிறிய காரியம் ஆனாலும் பெரிய காரியம். ஆனாலும் ஆண்டவருடைய தயவுள்ள கரத்தை எதிர்ப்பார்த்து அவர் மேல் நம்முடைய பிரச்சனைகளை நாம் போடுகிறபொழுது ஆண்டவர் அதை பொறுப்பேற்றுக்கொள்கிறார்.  என் வழக்காளிகளோடே நீர் வழக்காடும்.  எனக்கு பேச தெரியாது வழக்காட தெரியாது.  நான் என்னுடைய ஞானத்தை எடுத்து சொல்லி எதையும் சாதித்து விட முடியாது நீர் எனக்காக வழக்காடுவீராக.  என்னோடு கூட யுத்தம் பண்ணுகிறவர்களோடு கூட நீர் யுத்தம் பண்ணும் என்று அவன் வேண்டிக்கொள்ளுகிறான்.

எந்த ஆயுதத்தினாலும் அல்ல, எந்த சாதூரியத் தன்மைகளினாலும் அல்ல ஆண்டவருடைய உதவியைத் தேடுகிற தாவீதை இங்கு நாம் பார்க்கிறோம்.  நீர் எனக்காக யுத்தம் பண்ணும்.  நான் பலவீனன்.  நான் அறிவீனன்.  எந்த ஒரு காரியத்தையும் அடைந்துவிட சக்தியற்றவன்.  திராணியற்றவன்.  சர்வவல்லமையுடைய தேவனாகிய நீர் எனக்காக யுத்தம் பண்ணுவீராக.  இது தாவீதனுடைய நல்ல விண்ணப்பம்.  இந்த முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும்.  நாம் நம்முடைய மாம்சிக எண்ணத்தோடு கூட மனிதரோடுகூட போராடாதபடிக்கு ஆண்டவருடைய கிருபையுடைய கரத்தை நாம் தேடுகிறபொழுது அவர் நமக்கு உதவி செய்வார்.  இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களை தாழ்த்துகிறோம்.  சர்வ வல்லமை உடைய தேவன்.

நீர் உம்முடைய பிள்ளைகளுக்காக வழக்காடி நீர் உம்முடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்து எல்லா சண்டை சச்சரவுகளில் இருந்து விடுதலைக் கொடுத்து சந்தோஷத்தை சமாதானத்தை அருளிச்செய்து எங்களை ஆசிர்வதிப்பீராக.  நீரே உம்முடைய பிள்ளைகளை பலப்படுத்துவீர் கர்த்தாவே!  நீர் உம்முடைய பிள்ளைகளை காத்துக்கொள்வீராக.  இந்த கருத்தை கீழாக வைத்து அவர்களுக்கு அவர்களுடைய நன்மைகளை கொடுத்து அவர்களை ஆசிர்வதியும்.  அவர்களுக்கு பெரிய காரியங்களை செய்யும்.  இயேசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.  ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com