பரிசுத்த வாரம்
இன்றைய நாளில் ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர் எரிசலேமை நோக்கி சொல்கிற வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். லூக்கா பத்தொன்பது நாற்பத்தி இரண்டில், எரிசலமே! எரிசலமே! இந்நாளில் ஆகிலும் என் சமாதானத்திற்கு ஏற்றவைகளை அறிந்து இருந்ததினால், நலமாக இருக்கும். இது ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர், பெத்தோனியா பெத்லகேம் என்று சொல்லப்படுகிற கிராமங்களில் இருந்து எரிசலேமுக்கு நேராக பதனியாக செல்லுகிறபொழுது எரிசலேமின் நகர வாசலிலே வந்தபொழுது அந்த நகரத்தை பார்த்து இந்த வார்த்தைகளை சொன்னார்.
இந்நாளில் ஆகிலும் உம்முடைய சமாதானத்தில் கேட்டவைகளை அறிந்து இருந்தால் நலமாக இருக்கும். இது ஒரு முக்கியமான வார்த்தையாக கருதப்படுகிறது. இந்த வாரம் இந்த வருஷத்திலே இது பரிசுத்த வாரம் என்றும், பஸ்கா பண்டிகை நாட்களினின்றும், ஒய்தொழிலின் பண்டிகைக்காக காத்திருக்கிற நாட்களினின்றும் இந்த விஷேஷித்த நாட்களாக காணப்படுகிறது. ஆக இந்த விஷேஷித்த நாட்களில் அதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். இந்த நாளில் ஆகிலும் உன் சமாதானத்திற்கு ஏற்றவைகளை அறிந்து இருந்ததினால் நலமாக இருக்கும். உனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினியை ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர் கேட்டு கொண்டிருக்கிறார்.
சமாதானத்தை கொடுத்தற்காக சமாதான கர்த்தர் எங்களுக்கு நேராக வந்து கொண்டிருக்கிறார். அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே! அதை ஏற்று கொள்வீராக. அவருடைய கிருபையை பெற்று கொள்வீராக. அவர் நம்மை நோக்கி வருகிறபொழுது அவரை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். அவருடைய சத்தத்திற்கு நாம் செவி சாய்த்து அவரை நாம் மகிமைப்படுத்த வேண்டும். அவருடைய கிருபையை நாம் பெற்றுகொள்ள வேண்டும். சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினியை அவர் அடைந்து இருக்கிறார்.
நமக்காக நம்முடைய பாவங்களுக்காக அவர் மரிக்கும்படியாக வந்திருக்கிறார். அந்த ஏசுவை நாம் ஏற்றுகொள்ளுவோம். அவரை மகிமைப்படுத்துவோம். இந்த நாளை இந்த ஸ்லாக்கியத்தை நாம் அல்லல்தட்டாதபடி அந்த கிருபையின் நாட்களில் இருந்து அறிந்து உணர்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். கர்த்தருடைய பிள்ளைகளே! இந்த விஷேஷித்த வாரம் நமக்கு ஆசிர்வாதமான நாட்களாக இருக்கட்டும். நமக்காக பாடுபட மரிக்க முன் வந்த ஏசு கிறிஸ்துவான ஆண்டவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களை தாழ்த்துகிறோம். எங்களுக்காக மரிக்கும்படியாக எரிசலேமுக்கு நேராக வந்த ஏசுவாகிய ஆண்டவரே நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். எங்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக. எங்களுடைய குற்றங்குறைகளை மன்னிப்பீராக. எங்களுக்கு சமாதானமான வாழ்வைத் தாரும். சந்தோஷத்தை தாரும். துக்கங்கள் கவலைகள் எல்லாவற்றிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தாரும். பெரிய இரட்சிப்பை தாரும். சந்தோஷத்தை கொடுக்கும். கிருபையினால் தாங்கும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்