பாவக்கிரியைகள்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். சங்கீதம் பத்தொன்பது பதிமூன்றில் துணிகரமான பாவங்களுக்கு உம்முடைய அடியேனை விலக்கிக் காட்டும். அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெரும் பாதகத்துக்கு நீங்கலாய் இருப்பேன். இது தாவீதுனுடைய ஒரு சிறப்பான ஜெபமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மனசாட்சியை மலுக்கிக் கொண்டும், இருதயத்தைக் கல்லாக்கி கொண்டும் ஜுவனுள்ள ஆண்டவருக்கு முன்பாக துணிகரமான பாவங்களை செய்கிறதற்கு எனக்கு இடங்கொடாதிரும். என்னை விலக்கிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி ஆண்டவரிடத்திலே மன்றாடுகின்றான்.
பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு பிரியமில்லாத பாவகரமான காரியங்களிலே நான் விழுந்து விடக்கூடாது. என்னை நீர் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகின்றான். மேலும் அந்த பாவ பழக்க வழக்கங்கள் என்னை அடிமைக்கொண்டுவிடக் கூடாது. நான் அவைகளால் கட்டப்பட்டு காலம் முழுவதும் உள்ள பாவக்கிரியைகளிலே நான் விழுந்து அழிந்து போகாதபடிக்கு தேவனாகிய ஆண்டவர் என்னை காத்துகொள்ள வேண்டுமென்று மன்றாடி வேண்டிக்கொள்கிறான். இவ்விதமாக கர்த்தர் என்னுடைய ஜெபத்தை கேட்டு பாவ பழக்கவழக்கங்களில் இருந்து எனக்கு விடுதலை கொடுத்து அவர் என்னை பாதுகாத்து பராமரித்து மீட்பார் என்று சொன்னால் நான் உத்தமனாகுவேன். ஆண்டவருக்கு உண்மையுள்ளவனாக மாறுவேன். பெரும் பாதகத்திற்கு நீங்கலாக்கி ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையாக ஜுவிக்க எனக்கு ஒரு பெரிய கிருபை கிடைக்கும்.
கர்த்தாவே! என்னை பாதுகாத்து கொள்ளும். என்னுடைய ஆவி ஆத்மாவை பாதுகாத்து கொள்ளும் என்று வேண்டுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளே! நாமும் இவ்விதமாக கர்த்தரை நோக்கி ஜெபிப்போம். ஆண்டவரிடத்திலே நம்முடைய பலவீனங்களை அறிக்கையிடுவோம். அவருடைய பாதுகாப்பிற்காக பராமரிப்பிற்காக அவருடைய வழிநடத்துதலுக்காக நாம் கெஞ்சி மன்றாடி வேண்டி கொள்வோம். கர்த்தர் நமக்கு வேண்டிய உதவி செய்வார். இரக்கம் பாராட்டுவார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். எங்களுடைய பலவீனங்களை நீங்கள் அறிவீர். ஆண்டவரே! சத்ருவாகிய பிசாசினுடைய பாதைகளிலே வழிகளிலே நாங்கள் விழுந்து அழிந்து போகாதபடிக்கு உம்முடைய சட்டையிலே நிழலிலே வைத்து காத்து கொள்ளும். எங்களுடைய பரிசுத்த வாழ்க்கையினாலே நாங்கள் உம்மை மகிமைப்படுத்த அருள் செய்வீராக. காக்க வல்ல தேவன் எங்களோடுகூட இருந்து ஒவ்வொருவருக்கும் போதுமானவராக இருப்பீராக. நீரே பெரிய காரியங்களை செய்யும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்