பரிசுத்த பர்வதம்
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினைந்து ஒன்றிலே, கர்த்தாவே! யார் உம்முடைய கூடாரத்திலே தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? ஆண்டவருடைய கூடாரத்திலே தங்கக்கூடிய தகுதியுடையவன் யார்? என்று சொல்லி ஆண்டவரிடத்திலே கேட்கிறான். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? எனக்கு அந்த கிருபைக் கிடைக்குமா? ஆண்டவருடைய பரிசுத்த பர்வதத்திலே வாசம் பண்ணக்கூடியதான ஸ்லாக்கியம் எனக்கு கிடைக்குமா? ஏக்கத்தோடு ஒரு பாரத்தோடு ஒரு வாஞ்சையோடு கூட இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். அதற்கு பதிலே தாவீதேகூட சொல்லி இருக்கிறதை நாம் பார்க்கிறோம். உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதார சத்தியத்தை பேசுகிறவன்தானே என்று சொல்கிறான். ஏனென்றால் நம்முடைய வாழ்வு உத்தமமாக இருக்க வேண்டும்.
ஜுவனுள்ள ஆண்டவருக்கு முன்பாக உண்மையும் உத்தமுமாக மனசாட்சியுடையவர்களாக நாம் காணப்படுகிறபொழுது ஆண்டவர் அவருடைய சமூகத்திலே நம்மைத் தாங்கச்செய்வார். அவருடைய மகிமை நிறைந்த இடத்திலே வாசம் பண்ண நாம் தங்கியிருக்க கிருபை பாராட்டுவார். அந்த நன்மைகளை கர்த்தர் நமக்கு தந்தருளுவாராக. பரிசுத்தம் இல்லாமல், நீதி இல்லாமல், உண்மை இல்லாமல், உத்தமம் இல்லாமல் நாம் வாழ்வோம் என்று சொன்னால் அவருடைய கிருபாசனாத்தினிடையிலே மகிமை நிறைந்தயிடத்தினிலே நாம் செல்வது எப்படி? நம்மை தாங்கி அந்த கிருபைக்காக தேங்கி நிற்கும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். நீர் எங்களை தகுதிப்படுத்துவீராக. நாங்கள் உம்மை தரிசிக்க வேண்டும் உம்மோடுகூட உம்முடைய சமூகத்திலே உட்கார்ந்து உம்மை மகிமைப்படுத்த வேண்டும். உம்முடைய மகிமையுள்ள முகப்பிரகாசத்தினால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உம்முடைய சமூகத்தில் வருவது எப்படி? எங்களுக்கு அந்த பாக்கியத்தை தாரும். அந்த ஸ்லாக்கியத்தை தாரும். எங்களுக்கு இரக்கம் பாராட்டும். இந்நாளில் இந்த ஜெபத்தை தியானிக்கக்கூடிய ஒவ்வொரு பிள்ளைகளின் வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக.
உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிற உம்முடைய இரக்கத்திற்காகவே கெஞ்சி மன்றாடி கொண்டிருக்கிற எந்தவொரு சகோதருனுடைய சகோதரியினுடைய ஜெபத்தை கேட்மு நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக. சமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு நீர் போதுமானவராக இருப்பீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்