களிப்பு
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை நாம் தியானிக்க இருக்கிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினான்காம் அதிகாரம் ஏழாவது வசனத்திலே சியோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக. கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பை திருப்பும்போது யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். சியோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக.
ஜுவனுள்ள ஆண்டவர் வாசம் பண்ணுகிற மகிமையாய் எழுந்தருளிக்கிற அவருடைய சமூகத்திலிருந்து இரட்சிப்பு வரட்டும், விடுதலை வரட்டும், சந்தோஷம் வரட்டும், சமாதானம் வரட்டும் என்று சொல்லி இந்த ஜெபத்திலே தாவீது வேண்டிக்கொள்கிறதை நாம் பார்க்கிறோம். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் என்று சொல்லுகிறபடியாக கர்த்தர் தம்மை நோக்கி பார்க்கிற மக்களுக்கு இரட்சிப்பை அருளச்செய்கிறார். சமாதானத்தை கொடுக்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கிற தடைகள், பிரச்சனைகள், அடிமைத்தனங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுப்பீராக.
விஷேஷமாக கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட இஸ்ரவேலுக்கு யாக்கோபுக்கு அவருடைய நாமத்தை தரித்திரிக்கிற பிள்ளைகளுக்கு ஒரு பெரிய விடுதலை கொடுக்கிற தேவனாக இருக்கிறார். அது அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சந்தோஷத்தைக் கொடுக்கும். சமாதானத்தை தந்தருளும். தம்முடைய நெருக்கத்திலே தம்முடைய பிள்ளைகளை ஆதரிக்கிற ஜுவனுள்ள ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும். இந்த ஜெபத்தை தியானிக்கிற தம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் ஆண்டவர் இரக்கம் பாராட்டுவாராக. கிருபை செய்வாராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உங்கள் உதவிகளுக்காக ஒத்தாசைகளுக்காக இரட்சிப்பிற்காக விடுதலைக்காக நாங்கள் உம்மை நோக்கி மன்றாடுகிறோம் கர்த்தாவே! நீர் எங்களுடைய தடைகள் எல்லாவற்றையும் அகற்றிப்போட்டு எம்முடைய வாழ்க்கையிலே ஒரு பெரிய விடுதலைக் கொடுத்து சந்தோஷப்படுத்துவீராக. துக்கங்களை மாற்றும் கண்ணீரைத் துடைத்தருளும். ஆறுதலையும் தேறுதலையும் தந்தருளும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்