பதிலளிக்கிறவர்

இன்றைய நாளில் சங்கீதம் பத்து, பதினெட்டிலே மண்ணான மனுஷன் என்னை பலவந்தம் படுத்த தொடராதபடிக்கு தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி செய்ய உம்முடைய செவிகளை சாய்த்து கேட்டருளுவீர் என்ற ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். மண்ணான மனுஷன் என்னை பலவந்தம்படுத்த தொடராதபடிக்கு என்று சொல்கிற ஜெபத்தை நாம் பார்க்கிறோம்.

சிறுமைப்பட்டவர்களையும் திக்கற்றவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தம்முடைய பலத்தினாலே பணபலத்தினால் அதிகார பலத்தினால் ஒடுக்குகிறவர்கள் அநேகர் இருக்கின்றனர். அதிகமான மக்கள் தாங்கள் நெருக்கபடுகிறபொழுது, பல வேதனைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலே கடந்து செல்கிறபொழுது, தேவரீர்! நீர் அவர்களுடைய குறைகளை கேட்பீராக. அவருடைய ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு பலன் கொடுப்பீராக. அவர்களுடைய பிரச்சனைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை கொடுப்பீராக.

ஆபத்திலே நெருக்கத்திலே அவருடைய மன்றாடல் ஜெபத்திற்கு நீர் பதில் கொடுத்து அவர்களை தேற்றுவீராக. நான் உங்களை திக்கற்வர்களாக விடேன் என்று சொன்னீரே! அந்த ஆறுதலின் வார்த்தை ஏழைகளுக்கும் திக்கற்வர்களுக்கும் அநாதைகளுக்கும் கிருபையாக கிடைக்கட்டும் கர்த்தாவே! பலமுள்ள மனிதனுடைய காரியங்கள் எல்லாவற்றையும் நீர் வதம்பண்ணி போட வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஆம் ஆண்டவரே! நீர் பதில் கொடுக்கிறவர். கண்ணீருள்ள ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். வேதனைகளை நீங்க செய்கிறவர். சமாதானத்தை சந்தோஷத்தை அருளிச் செய்கிறவர். உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் போதுமானவராக இருப்பீராக.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்நாளின் ஜெபத்தை நீர் கேட்பீராக. திக்கற்வர்களும் ஆதரவற்றவர்களும் அநாதைகளுமாய் காணப்படுகிற எந்தவொரு மனிதனும் தன்னுடைய நெருக்கத்திலே அவரை நோக்கி கூப்பிடுகிறபொழுது அவர்களுக்கு நீர் பதில் கொடுப்பீராக. நீர் அவர்களுடைய சத்தத்திற்கு உடனே பதில் கொடுத்து அவர்களை விடுவிப்பீராக. நீர் அவர்களை இரட்சித்து கொள்வீராக. சமாதானத்தின் தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com