தீமையிலிருந்து விலக்கி காக்கிறவர்
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். ஏழாம் சங்கீதம் முதலாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். என் தேவனாகிய கர்த்தாவே உம்மை நம்பி இருக்கிறேன். என்னை துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். உம்மை நம்பி இருக்கிறேன் என்னை துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
தன்னுடைய விசுவாசத்தை தன்னுடைய உறுதியான மனப்பான்மையை தாவீது ராஜா ஜுவனுள்ள ஆண்டவருடைய சமூகத்திலே சொல்கிறதை நாம் பார்க்கிறோம். நான் உன்னை நம்பியிருக்கிறேன். மனிதனை அல்ல, அதிகாரத்தை அல்ல, பணத்தை அல்ல அல்லது மக்கள் கூட்டத்தை அல்ல உம்மையே நம்பி இருக்கிறேன். நீரே சர்வ வல்லமையுள்ள தேவன்.
நீரே உலகத்தின் ராஜாக்களையும் மனிதர்களையும் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தேவனாக இருக்கிறீர். நீர் செய்ய நினைத்த காரியம் தடைபடாது. உம்மை நம்பியிருக்கிறேன் செழுமைப்பட்டவனான நான் உம்மை நம்பியிருக்கிறேன். உம்முடைய கிருபையின் கரத்தினால் என்னை தாங்குவீராக என்று சொல்லி வேண்டி கொள்கிறான். என்னை துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கு என்னை விலக்க இரட்சியும். என்னை சுற்றிலும் என்னை வேதனைப்படுத்துகிற மக்களே நெருங்கி இருக்கிறார். எந்தெந்த காரியங்களிலே குற்றங்களை கண்டுபிடித்து குறைகளை கண்டுபிடித்து அவனை தூஷிக்கலாம், நிந்திக்கலாம், பரிகாசம் பண்ணலாம், ஏளனம் பண்ணலாம் என்று சொல்லி காத்து கொண்டு இருக்கிறார்கள் கர்த்தாவே. என்னை மன வேதனைப்படுத்துவதையே அவர்கள் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.
என்னை துக்கப்படுத்தி என்னை வேதனைப்படுத்தி என் மனதிலே இருக்கிற சமாதானத்தை சந்தோஷத்தை எடுத்து போடுவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. நீர் அதை மாற்றுவீராக. அவர்களுடைய கைகளுக்கு விலக்கி இரட்சிப்பீராக. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை விடுவிப்பீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். உம்மை நம்புகிற உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு இரக்கம் பாராட்டும். எங்களை இரட்சித்து கொள்ளும். பொல்லாதவர்கள், தீயவர்கள், அக்கிரமக்காரர்கள் கர்த்தாவே சதிசர்ப்பனையான காரியங்களை செய்கிறவர்கள், வஞ்சகக்காரர்கள், பொய்காரர்கள் ஆகிய எல்லாருடைய கரங்களிலிருந்தும் என்னையும் எங்களையும் நீர் மீட்டுகொள்வீராக. நீர் எங்களுக்கு விடுதலைக் கொப்பீராக.
சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்து எங்களை ஆசிர்வதிப்பீராக. உம்முடைய கிருபை எங்களுக்கு போதுமானதாக இருக்கட்டும். இந்த ஜெபத்தை தியானித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொருக்கும் வேண்டிய சகல நன்மைகளையும் ஆசிர்வாதங்களையும் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்