8 வழி சாலை | தமிழக அரசின் அதிகார பூர்வ இழப்பீடு தொகை பட்டியல்.
சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழி பசுமை சாலை சுமார் 10,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் சுமார் 277.3 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வழித்தடத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1900 ஹெக்டேர் என்று தமிழக அரசின் தரப்பிலும், சுமார் 2560 ஹெக்டேர் என்று மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் தரப்பிலும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் சுமார் 10,000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் கருதுகின்றனர். இந்நிலையில் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் இந்த திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கான இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ள இழப்பீடு தொகை:
1 கால்நடைகளின் கொட்டகை: ரூ 25,000
1 மாம்பழ மரம்: ரூ 30,000
1 அம்லா மரம்: ரூ 4,000
1 புளியம்மரம்: ரூ 9375
1 தென்னை மரம்: ரூ 50,000
1 கொய்யா மரம்: ரூ 4,200
1 பலாமரம்: ரூ 9,600
1 பனை மரம்: ரூ 5,000
மேலும், வறண்ட/ஈரநில வகை மற்றும் பண்ணை வீடு/பம்புசெட் வசதிகள் இருக்கும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ 9.04 கோடி மற்றும் குறைந்தபட்சமாக ரூ 21.52 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ள இழப்பீடு தொகை சற்று மாறாக இருக்கிறதை நாம் கவனிக்க வேண்டும்:
1 தென்னை மரம்: ரூ 80,000
1 பனை மரம்: ரூ 2,000
1 வாழை மரம்: ரூ 1,000
1 கிணறு: ரூ 1.25 லட்சம்
1 பம்ப்செட் உடைய கிணறு: ரூ 3.75 லட்சம்
1 சதுரடி கான்கிரீட் கட்டமைப்புகள்: ரூ 150
மேலும், ஒரு ஹெக்டேர் நிலம், விலை-நிர்ணய வழிமுறை மூலம் மதிப்பிடப்பட்டு கொடுக்கப்படும் விலை, சந்தை மதிப்பின் 1.27 மடங்கு விலையுடன் ஒப்பிடப்பட்டு, அதிகபட்ச விலையில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படும் என அறிவித்துள்ளார்.