தைரியம்

இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியா இரண்டாம் அதிகாரம் இருபதாம் வசனத்திலே பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்கு காரியத்தை கைகூடி வரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம். உங்களுக்கென்றால் எரிசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை  உங்கள் பெயர் விளங்க ஒன்றுமில்லை. இந்த ஜெபத்தை நெஹேமியா ஏறெடுக்கிறான்.

பாபிலோன் ராஜாவுக்கு பானபாத்திரகாரனாக இருந்ததான நெஹேமியாவினுடைய விண்ணப்பங்களை கேட்ட ராஜா எரிசலேமுக்கு சென்று அதன் அலங்கத்தையும், சுட்டெரிக்கப்பட்ட வாசல்களையும் சரிசெய்து அதை ஒழுங்குப்படுத்துவதற்காக அனுப்புகின்றான். ராஜ அதிகாரத்தோடும், உதவியோடும் வந்ததான நெஹேமியா தான் செய்ய போகிற காரியங்களை குறித்து தேசத்து மூப்பர்களோடும், ஆசாரியர்களோடும், லேவியர்களோடும், அதிபதிகளோடு கூட சேர்ந்து கலந்து பேசி நாம் எழுந்து கட்டுவோம் என்று சொல்லி ஒருமுகப்பட்டு வருகிறார்கள். ஒரு பெரிய உற்சாகம் அவர்கள் மத்தியிலே காணப்பட்டது. ஆனால் அங்கே வாழ்ந்து வந்ததான அந்நிய மக்களான சம்பலாத், தொவியா, கேசு போன்றதான அந்நிய மக்கள் இந்த காரியத்திற்கு எதிராக பலத் தடைகளை கொண்டு வருகிறார்கள். நாங்களும் சேர்ந்து கொள்வோம் என்று சொல்லி ஒரு சூழ்ச்சியான காரியத்தை மேற்கொள்கின்றார்கள். அப்பொழுதுதான் நெஹேமியா சொல்கிறான் நாங்கள், ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்.

சம்பலாத், தொவியா, கேசு போன்றதான உங்களுக்கு ஒன்றுமில்லை உம்முடைய பெயர்களை சொல்வதற்கு கூட இங்கே யாருமில்லை. வம்சவட்டனோல்லோ அல்லது யூத குலத்திலோ உங்களுடைய பெயர் இல்லை. நாங்கள் ஆண்டவருக்கு மகிமையாகக் கிட்டுவோம் என்று சொல்லி வைராக்கியத்தோடு கூட இந்த காரியத்திலே ஈடுபடுகிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் ஆண்டவருக்கென்று பெரிய காரியங்களை செய்கிறபொழுது சத்ருக்கள் தடைகளை கொண்டுவருவார்கள். சூழ்ச்சிகளை செய்து நம்மை பல இன்னல்களுக்கு நேராக நடத்துவார்கள். நாம் சோர்ந்து போகக்கூடாது. நாம் ஒருமித்து இருக்க வேண்டும். ஒரே சிந்தையாக இருக்க வேண்டும். மற்றவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். ஜெபத்தினால் தாங்க வேண்டும். கர்த்தர் நம்மோடுகூட இருப்பார்.

கர்த்தாவே! இந்த ஜெபத்தை ஏறெடுக்கிற ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபைகளின் வரங்களை தந்தருளுவீராக! நாங்கள் தொடனற்று போகாதபடி சோர்ந்து போகாதபடி ஒருவரையொருவர் தைரியப்படுத்தி உற்சாகம் கொண்டு உமக்கென்று மகிமையான காரியங்களை செய்து நாங்கள் சந்தோஷப்பட எங்களுக்கு அருள் செய்வீராக. எதிராளிகளுடைய சூழ்ச்சிகளை நாங்கள் அடையாளங்கண்டு கொள்ள நீர் எங்களுக்கு அருள் செய்வீராக!

உம்முடைய கிருபையின் கரம் எங்களோடு கூட இருக்கட்டும். இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கும் வேண்டிய நன்மைகளை கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக! சமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராக இருப்பீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com