பாவங்கள்
இந்த நாளில் நெஹேமியாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தை கேட்கிறதற்கு உம்முடைய செவிகள் கவனித்தும் உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம். இந்த ஜெபத்தை நெஹேமியா ஏறெடுக்கிறான். ரோமியாவின் நாட்களில் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்ததாலே ஆண்டவர் உங்களை பாபிலோனுக்கு நேராக சிறையில் அடைப்பார்.
மனந்திருந்துங்கள் என்று சொல்லி எத்தனையோ முறை சொல்லி பார்த்தான். யாரும் மனந்திரும்பினப்பாடில்லை. ஆகவே கர்த்தர் அவர்களை பாபிலோனுடைய கைகளிலே விட்டுபோட்டார். பாபிலோன் ராஜாக்கள் எரிசலேமின் மேலும் யூதாவின் மேலும் படையெடுத்து வீரமக்களில் அநேகரை சிறைப்பிடித்து கொண்டு போனார்கள். அதிகமாக பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டவர்களில் சாத்ராய், மீஷா, யாபேத்நேகு, தாமியேல், எஸ்ரா, நெஹேமியா போன்ற மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதிகமாக கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவன்தான் இந்த நெஹேமியா.
நெஹேமியா பாபிலோனிலே ராஜ அரண்மனையிலே ராஜாவுக்கு பான பாத்திரக்காரனாக இருக்க ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அவன் தனக்கென்று வாழாமல் தன்னை ஆட்கொண்டவரும் அழைத்தவரும் கிருபையினால் பாதுகாத்து வருகிறவருமான ஆண்டவரை நினைக்கின்றான் அவருடைய ஜனங்களை நினைக்கின்றான். அவர்களுக்காக பாரப்பட்டு ஜெபிக்கிறான். ஆகவே பாரத்தோடு கண்ணீரோடு இந்த ஜனங்களோடு கூட சேர்ந்து ஜெபிக்கிற எம்முடைய ஜெபத்தை கேட்பீராக என்று மன்றாடுகிறான். மேலும் அவன் தன்னை தாழ்த்தி ஒப்பு கொடுக்கிறான். நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம்.
ஒரு அந்தஸ்து அல்லது ஒரு பெரிய பதவி ஒரு பாவத்தை மறைக்க முன்வரவில்லை. தாழ்மையை தேடுகிறான். தன்னுடைய சிறுமியை நினைத்து பார்க்கிறான். ஆண்டவருடைய கிருபைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். செவிசாய்த்து கேட்பீராக. கண்ணோக்கி பார்ப்பீராக. பாவம் செய்தவர்களாகிய எங்கள் பேரிலே இரக்கம் பாராட்டுவீராக என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
கர்த்தருடைய பிள்ளைகளே! ஆண்டவருக்கு முன்பாக நாம் தாழ்மைப்படுவோம். நம்முடைய குற்றத்தை மறைக்காமல் ஆண்டவருடைய சமூகத்திலே அறிக்கையிடுவோம். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்துவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று சொல்லி வேதத்திலே வாசிக்கிறோம். இரக்கமுள்ள ஆண்டவர் நம் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் கேட்டு நமக்கு இரட்சிப்பை கொடுப்பாராக. கிருபையுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை துதிக்கிறோம்.
எம்முடைய ஜெபத்திற்கு நீர் செவி சாய்ப்பீராக! நீர் கண்ணோக்கி பார்த்து உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு கட்டளையிடுவீராக! உம்முடைய தயவுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும். சிறியவர்ளோ பெரியவர்களோ யார் செய்திருந்தாலும் என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து அவர்களை இரட்சித்து உம்முடைய பிள்ளைகளாக மாற்றுவீராக. உம் தயவுள்ள கரம் உம் பிள்ளைகளோடு கூட இருக்கட்டும். பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்