கர்த்தரின் நியாயம்

இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் பனிரெண்டாவது வசனத்திலே, எங்கள் தேவனே எங்களுக்கு நீர் நியாயம் செய்ய மாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த திரளான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பலன் இல்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கி கொண்டு இருக்கின்றது.

இந்நாளினும் யோசேபாத் ராஜாவினுடைய ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். பெரும் திரளான படைவீரர்களோடு கீதாவின் ராஜாவாகிய யோசேபாத்தையும் அவனுடைய ஜனங்களையும் யுத்தத்திலே அழிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வேளையிலே கர்த்தருடைய சமூகத்திலே மன்றாடுகிற இந்த பிள்ளைகள் தங்களை தாழ்த்துகின்றார்கள். அவர்களை நீர் நியாயம் விசாரிக்கமாட்டீரோ? ஆபிரகாமிற்கும் ஈசாக்கிற்கும் யாக்கோபிற்கும் கொடுத்த வாக்குதத்தத்தின் பூமியிலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களை துரத்திவிட, எங்களை அழித்துவிட நோவா ஜனங்கள் எதிரிகளாக எங்களை பார்த்து வந்திருக்கின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு நீதி கேடான அநீதியான காரியங்களை செய்யவில்லை. நீர் எங்களுக்கு இரட்சிப்பை தாரும். எங்களுக்கு நியாயத்தை எங்களுக்கு கட்டளையிடும். எங்களுக்கு விரோதமாக வந்த திரளான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு வல்லமையில்லை. சரீர பிரகாரமாக எங்களுக்கு அந்த பலன் இல்லை. ஆனால் எங்களுக்கு கர்த்தர் உதவி செய்வீராக. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் கண்கள் உம்மையே நோக்கி கொண்டிருக்கிறது.

உம்முடைய உதவியை எதிர்பார்த்து நாங்கள் உம்மை நோக்கி கொண்டிருக்கிறோம். இரக்கம் பாராட்டுவீராக. கிருபை செய்வீராக. சத்ருக்களின் கைகளில் இருந்து எங்களுக்கு விடுதலை கொடுப்பீராக. நீதியின் தேவன் நியாயத்தின் தேவன் எங்களுக்காக பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிறார். இந்த ஜெபத்தை கேட்ட கர்த்தர் அவர்களுக்கு அற்புதங்களை செய்தார். வேதங்களை செய்தார். ஜெயத்தை கொடுத்தார். வெற்றி சிறக்க பண்ணினார். அதேபோன்று நம்முடைய வாழ்க்கையிலும் எந்த உபத்திரங்கள் இருந்தாலும் எத்தகையான பாடுகள் நமக்கு எதிர்கொண்டு வந்தாலும் நாம் ஒரே நம்பிக்கையாக திட மனதோடுகூட கர்த்தரை நோக்கி நாம் வேண்டிகொண்டால் கர்த்தர் நமக்கு அற்புதங்களை செய்வார். நன்மையான காரியங்களை கட்டளையிட்டு நம்மை சந்தோஷப்படுத்துவார். கிருபையின் கரம் நம்மை தாங்கும்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலும் எங்களை தாழ்த்தி உம்முடைய சமூகத்திலே மன்றாடி ஜெபத்தை ஏறெடுக்கிற உம்முடைய பிள்ளைகளுக்கு இரக்கம் பாராட்டுவீராக. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லி தம்முடைய இயலாமையை தன்னுடைய பலவீனத்தை உம்முடைய சமூகத்திலே அறிக்கையிட்டு ஒப்பு கொள்ளுகிற உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் பலன் கொடுப்பீராக. நீர் அவர்களை சத்துவப்படுத்துவீராக.

உம்முடைய வல்லமையுள்ள கரம் அவர்களுக்கு ஆறுதலாக உறுதுணையாக இருப்பதாக. நீர் அவர்களை வெற்றி சிறக்க பண்ணும். அவர்களை சந்தோஷப்படுத்தும். துக்கங்களையும் கலக்கங்களையும் மாற்றி போட்டு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளிச்செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. இந்நாளிலே ஜெபத்திலே பங்குகொண்டிருக்கிற அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. கிருபை அவர்களோடு கூட இருப்பதாக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com