உதவி
இன்றைய நாளிலே ஆசா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு நாலாகமம் பதினான்காம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு இலேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே! எங்களுக்கு துணை நில்லும். உம்மை சார்ந்து உம்முடைய நாமத்தை ஏராளமான இந்த கூட்டத்திற்கு எதிராக வந்தோம்.
கர்த்தாவே! நீரே எங்கள் தேவன். மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும். யூதாவின் ராஜாவாகிய ஆசா இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். அங்கே எத்தோப்பிய ராஜா சேரா பத்து இலட்சம் இராணுவ வீரர்களோடும் முந்நூறு ரதங்களோடும் பெரும் திரளாக கூடி யூதாவின் ராஜாவாகிய ஆசாவிற்கு விரோதமாக வந்து நிற்கிறான். இவ்விதமான நெருக்கமான சூழ்நிலையிலே ராஜா கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்மைப்படுத்துகிறான். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே! நீர் பலனுள்ளவனுக்கும் பலனற்றவனுக்கும் உதவி செய்ய வல்லவராக இருக்கிறீர்.
யாரையும் பலப்படுத்தவும் யாரையும் வல்லமைப்படுத்தவும் உம்மாலே ஆகும். நாங்கள் இப்போது உங்களுடைய தயைவை எதிர்ப்பார்த்து வந்த இருக்கிறோம். நீர் எங்களுக்கு துணை நில்லும் மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதிரும் என்று சொல்லி அவன் ஜெபிக்கிறான். முழுமையான அற்பணிப்போடு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு அவனுக்கு விடுதலை கொடுத்தார். நாமும் நம்முடைய நெருக்கங்களிலே கவலைகளிலே கண்ணீர்களிலே சோர்ந்துபோன சூழ்நிலைகளிலே கர்த்தரை நோக்கி நாம் ஜெபிப்போம். கர்த்தர் நமக்கு பராக்கிரமமான காரியங்களை செய்து நம்மை ஆசிர்வதிப்பார். இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம்.
சத்ருக்களால் தீயவர்களால் பொல்லாதவர்களால் அக்கிரமக்காரர்களால் எங்களுக்கு ஏற்படுகிற எல்லா நிந்தனைகளுக்கு மத்தியிலும் வேதனைகளுக்கு மத்தியிலும் உம்முடைய முகத்தை நோக்கி பார்க்கிறோம். சிறுமைப்பட்ட உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை கண்ணோக்கி பாரும். நீர் எங்களுக்கு தயைவு செய்வீராக. இரக்கம் பாராட்டுவீராக. உம்மை நம்பி வந்திருக்கிற உம்முடைய அடியார்களாகிய உம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய உதவிகளை அள்ளி செய்வீராக. சகல ஆறுதலின் தேவன் சகல சமாதனத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராக இருப்பீராக. நீரே பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்