தேவனின் அருள்
இன்றைய நாளிலே தீது ராஜாவின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம். இரண்டு ராஜாக்களின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாவது வசனத்திலே கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும் தமது ராஜகரியத்திற்கு ஒரு அரண்மனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியும் உடைய ஞானமுள்ள குமாரனை தாவீது ராஜாவிற்கு கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்த்தோஸ்த்திரம் உண்டாவதாக என்று தீரு ராஜா சொல்லுகிறான்.
வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு யுக்தியும் புத்தியும் உள்ள ஒரு குமாரனை கர்த்தர் தாவீதுக்கு கொடுத்தது ஒரு பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லி தீரு ராஜா மனப்பூர்வமாக இந்த வார்த்தைகளைச் சொல்லி அவன் சந்தோஷப்படுகிறதை நாம் பார்க்கிறோம். ஆண்டவருடைய பணியை செய்வதற்கு நமக்கு விஷேசித்த ஞானம் வரம் தேவை.
ஆண்டவருடைய அருள் நமக்கு தேவை யுக்தியும், புத்தியும், விவேகமும், ஞானமும் நமக்கு அவசியம் ராஜாதி ராஜாவாகிய ஜீவனுள்ள ஆண்டவருக்கு என்று சொல்லி ஒரு தேவாலயத்தை கட்டுவதற்கு எடுத்துக்கொள்ளுகிற பிரயாசங்களை ஆண்டவர் ஆசிர்வதிக்க வேண்டும். அந்த பணிகளை செய்கிற மக்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக சாலோமனுக்கு இவ்வளவு பெரிய பாக்கியத்தை ஆண்டவர் கொடுத்தார். அதிலே இந்த தீரு ராஜாவும் பங்குகொள்கிறான். அவனுக்கும் மனமகிழ்ச்சி உண்டாகிறது. நாமும் ஆண்டவருடைய ஊழியத்தை செய்கிற மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறவர்களாக இருப்போம். நம்மால் இயன்றவைகளைக் கொடுத்து அவர்களை தாங்குவோம். கர்த்தாவே இந்த ஜெபத்தை கேட்கிற ஒவ்வொருக்கும் வேண்டிய நன்மைகளைத் தாரும்.
உம்முடைய நாமம் மகிமைக்காக உம்முடைய பிள்ளைகள் செய்கிற எந்தவொரு காரியத்தையும் நீர் அங்கீகரிப்பீராக! அதிலே அவர்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தாரும். நல்ல முன்னேற்றத்தைக் கொடும். அவர் வேண்டிக்கொண்டதற்கு மேலான பல நன்மைகளைக் கொடுத்து அவர்களை ஆசிர்வதிப்பீராக! கர்த்தர் அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து அவர்களை ஆசிர்வதிப்பாராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென், ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்