ஆலயம்

இன்றைய நாளில் தாவீது சாலமோனுக்காக ஏறெடுத்த ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலாகமம் இருபத்தி இரண்டாவது அதிகாரம் பதினாறாவது வசனத்திலே நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடு இருப்பாராக. நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடு இருப்பாராக. தாவீது தான் உயிரோடு இருக்கிற நாட்களிலேயே சாலமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ண செய்தான்.

தம்முடைய சிங்காசனத்திலே அவனை உட்கார செய்து, அவனை ஆசிர்வதித்து அவனை ஜெபிக்கிறான். அவனுடைய நாட்களிலே கர்த்தர் விரும்பனபடி எரிசலேமிலே ஒரு மகிமையான ஆலயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்கிற காரியத்தை சாலமோனுக்கு உணர்த்தி காட்டுகிறான். நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடு இருப்பாராக. அவனை உற்சாகப்படுத்தும்படியாக தாவீது எல்லா காரியங்களிலும் உதவியாக இருக்கிறான். தான் சம்பாதித்த பொன்னையும் வெள்ளியையும் எல்லா கற்களையும் மரங்களையும் கர்த்தருக்கு என்று கொடுக்கிறான். ஜனங்களையும் உற்சாகப்படுத்துகிறான். தேசம் அமெரிக்கையாக இருக்கிறது. ஆகவே நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடுகூட இருப்பாராக என்று சொல்லி அவனை தேற்றுகிறதை நாம் பார்க்கிறோம்.

ஜுவனுள்ள ஆண்டவருக்காக நாம் பணி செய்கிறபோது நம்மை உற்சாகப்படுத்தக்கூடிய மக்கள் தேவை. நமக்கு தைரியம் கொடுக்ககூடிய மக்கள் தேவை. அதேபோன்று நாமும் செயல்பட வேண்டும். கர்த்தாவே! இந்த வேளைக்காக நாங்கள் உம்மை ஸ்த்தோத்திக்கிறோம். உமக்கென்று தியாகமாக அர்ப்பணம் செய்து உம்முடைய ஊழியங்களை செய்யும் மக்களை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களை ஜெபத்திலே தாங்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இவ்விதமான ஜெபத்திற்கேற்ற பலனை கொடுப்பீராக.

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுடைய மன விருப்பங்களை கட்டளையிட்டு அவர்களை ஆசிர்வதித்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. மிகப் பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com