கண்களை திறந்தருளும்
இந்த நாளின் ஜெபத்தை எலிசாவின் வார்த்தைகளாலே நாம் தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்கள் ஆறாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, கர்த்தாவே! இவன் பார்க்கும் படிக்கு இவன் கண்களை திறந்தருளும். இவன் பார்க்கும் படிக்கு இவன் கண்களை திறந்தருளும் என்று சொல்லி எலிசா ஜெபிக்கிறான்.
சீரா தேசத்தினுடைய ராஜா இஸ்ரவேல் தேசத்தின் மேலே திடீர் திடீரென்று சொல்லி தன்னுடைய படைகளை அனுப்பி, அந்த ராஜாவுக்கு பல இடையூறுகளை கொடுத்துகொண்டு வந்தான். அதற்காக பிராயசப்பட்டான். ஆனால், தீர்க்கத்தரிசியாகிய எலிசா இந்த சீராத்தேசத்தினுடைய படைகள் எங்கே வருகிறது எந்த இடத்திலே பாழையம் இறங்கியிருக்கிறார்கள் என்பதை இஸ்ரவேலின் ராஜாவுக்கு ஆள்மூலமாக சொல்லி அனுப்பி அவர்களை தப்பி செல்வதற்கு வழிவகுத்து வந்தார். ஆகவே, சிரியா ராஜா அவருடைய திட்டங்கள் அங்கே பழிக்கவில்லை.
இஸ்ரவேல் தேசத்தின் மேலே படையெடுக்க தன்னுடைய படைகளை அனுப்புகிறபொழுதெல்லாம் அவர்கள் வெறுங்கையாகத்தான் திரும்பி வருவார்கள். ஆகவே இது சிரியா ராஜாவுக்கு ஒரு பெரிய குழப்பம். நம்முடைய படைவீரர்களிலே யாராயினும் ஒற்றராக இருந்து இந்த காரியங்களை இஸ்ரவேலின் ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறார்களோ என்று சொல்லி சிறு கலக்கத்தோடு இராணுவ வீரர்களை அழைத்துக் கேட்கிறான். நம்மிலே யார் உளவாளி என்று சொல்லி கேட்கிறான். அப்பொழுதுதான் ஒரு படைவீரன் சொல்லுகிறான் உலவாளி யாருமேயில்லை இஸ்ரவேலிலே இருக்கிற எலிசா என்கிற தீர்க்கத்தரிசி நீர் பேசுகிறதையும் நீர் நடத்துகிற காரியங்கள் எல்லாவற்யையும் தரிசனத்திலே கண்டு கர்த்தருடைய அருள்வாக்காக அதை இஸ்ரவேலின் ராஜாவுக்கு அதை வெளிப்படுத்துகிறான், அவர்கள் தப்பித்துகொள்கிறார்கள் என்று சொல்லுகிறான். அவர்களை பிடிப்பதற்காக தோத்தானிலே இருக்கிற எலிசாவை பிடிப்பதற்காக சிரியாவினுடைய படைகள் செல்லுகிறது. அந்த மலையை சுற்றிலும் அவர்களுடைய படைகள் முகாமை அமைத்திருக்கிறார்கள்.
அதிகாலையிலேயே இந்த கேயாசு எழும்பி வெளியே செல்ல முற்படுகிறபொழுது படைவீரர்களையும் ரதங்களையும் இராணுவ வீரர்களையும் பார்த்து ஆண்டவனே! நாம் என்ன செய்வோம் என்று சொல்லி கலங்கி தவித்து பேசுகிறான். அப்பொழுதுதான் எலிசா இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தாவே! இவன் பார்க்கும் படிக்கு கண்களை திறந்தருளும் என்று சொல்லி வேண்டுகிறான். கர்த்தரினுடைய அக கண்களை திறந்தார் எலிசாவை சுற்றிலும் அக்னிமயமான ரதங்கள் அங்கே இருந்தது. அதைப் பாதுகாக்கும் படியாக அத்தனை பேர்களை ஆண்டவர் அனுப்பியிருந்தார்.
கர்த்தாவே! உம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கிற நெருக்கங்களை நீர் காண்கிற தேவன் எங்களோடு கூட இருக்கிற மக்களுக்கு விசுவாசத்தை கொடுக்கும்படியாக அகக்கண்களை திறந்து ஒரு உறுதியான நம்பிகையைக் கொடுக்கிற கர்த்தர் எங்களுக்கும் உதவி செய்வீராக. நாங்கள் சோரம் போகக்கூடாது, சோர்ந்து போய்விடக்கூடாது, அவ நம்பிகையிலே விழுந்து விடக்கூடாது நாங்கள் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் ஒருவருகொருவர் அனுசரனையாக இருக்க வேண்டும் கிருபை எங்களை தாங்கட்டும் கேயாசினுடைய கண்கள் திறந்ததுப்போன்று எங்களையும் திறப்பீராக!
உம்முடைய மகிமையின் காட்சிகளை வலிமையுள்ள ஆண்டவர் செய்கிற பராக்கிரம கிருபைகளைக்கண்டு உமக்கு மகிமை செலுத்து அருள் தருவீராக! இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உம்முடைய நன்மைகளை கொடுத்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக! ஏசு கிருஸ்த்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்