பலிபீடம்

இந்த நாளில் எலியாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். ஒன்று ராஜாக்கள் பதினெட்டாம் அதிகாரம் முப்பத்தி ஆறாவது வசனத்தில் அந்த ஜெபம் குறிக்கப்படுகிறது. ஆபிரகாமுக்கும் ஈசாவுக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே நீர் தேவன் என்றும் நான் உன்னுடைய ஊழியக்காரன் என்றும் நான் இந்த காரியங்களை எல்லாம் உம்முடைய வார்த்தைபடி செய்தேன் என்றும் இன்றைக்கும் விளங்கப்பண்ணும் ஆகாப் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை துன்மார்க்கமான வழிகளே நடத்துகின்றான். அவர்களை தண்டித்ததற்காக ஆண்டவர் வஞ்சத்தை கட்டளை இடுகிறார்.

குறிக்கப்பட்ட நாளிலே கர்த்தர் எலியாவை அழைப்பித்து, நீ உன்னை ஆகாப் ராஜாவுக்கு முன்பாக போய் நில் என்று சொல்கிறார். எலியாவும் ஆகாப் ராஜாவை சந்தித்து கர்மேல் பருவதத்திலே நானூற்றி ஐம்பது பாகாள் தீர்க்கதரிசிகளையும் ஏசேபிலுடைய நானூறு பாகாள் தீர்க்கதரிசிகளையும் அங்கே அழைத்து வரும்படியாக சொல்லுகிறான். மேலும் இரண்டு காளைகளை பலியிடுவதற்காக ஆயத்தப்படுத்தும் என்று சொல்கிறான். இவ்விதமாக இஸ்ரவேல் மக்களும் படைவீரர்களும் ஆகாப் ராஜாவும் அங்கே கர்மேல் பருவதத்திலே கூடி வருகிறார்கள். அங்கே எலியா சொல்கிறான் நீங்கள் முதலாவதாக ஒரு காளையை தெரிந்துகொள்ளுங்கள் விறகை அடுக்கி காளையை பலியிட்டு அதை விறகின் மேல் அடுக்கி வையுங்கள். உங்கள் இறைவனை நோக்கி மன்றாடுங்கள். வானத்திலிருந்து அக்னியை அனுப்பி பலி அங்கீகரிக்கிற தேவனே தெய்வம் என்று சொல்கிறான்.

பாகாள் தீர்க்கதரிசிகள் பகல் முழுவதும் தியானம் பண்ணி பார்க்கிறார்கள். பலனில்லை. கடைசியாக மாலை வேளையிலே எலியா சொல்கிறான் கர்த்தரை நோக்கி பலிபீடத்தை கட்டி விறகை அடுக்கி பலிபொருளை ஆயத்தப்படுத்தி வைத்து ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறான். நான் இந்த காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்பதை இன்று நீர் விளங்கபண்ணும் இங்கே கூடி வந்திருக்கிற மக்கள் அனைவரும் நீர் ஜுவனுள்ள ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறான்.

கர்த்தர் அந்த ஜெபத்தை கேட்டார் வானத்திலிருந்து அக்னியை அனுப்பினார். பலிபீடத்தில் உள்ளவைகள் எல்லாவற்றையும் அது பட்சித்து போட்டது. ஜனங்கள் ஆராவாரித்து ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள். கர்த்தாவே! நெருக்கத்திலே எங்களுடைய ஜெபத்தை கேட்பீராக. எங்களுடைய இருதயத்திலே வைராக்கியமாக உம்மை நோக்கி மன்றாடுகிற வேண்டிகொள்கிற காரியங்களை எங்களுக்கு நீர் கட்டளை இடுவீராக!

சத்ருக்களுக்கு முன்பாக எதிராளிகளுக்கு முன்பாக நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி உம்முடைய நன்மைகளை எங்களுக்கு நீர் கட்டளை இடுவீராக! நீர் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து பிள்ளைகளை நீர் ஆசிர்வதிப்பீராக. உம்முடைய பிள்ளைகளுடைய விசுவாசத்தை நீர் கணப்படுத்துவீராக! வெண்ணான காரியங்களை கட்டளையிடும் இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக! இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com