வாக்கு மாறாதவர்

இன்றைய நாளில் சாலமனுடைய ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  ஒன்று ராஜாக்கள் எட்டாம் அதிகாரம் இருபத்தைந்தாவது வசனத்திலே தேவரீர்! என் தகப்பனாகிய தாவீது எனும் உம்முடைய தாசனை நோக்கி நீ எனக்கு முன்பாக நடந்துபோவது போல உம் குமாரனும் எனக்கு முன்பாக நடக்கும் படி தங்கள் வழியை காப்பார்களேயானால் இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல்   வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை அவனுக்கு நிறைவேற்றியருளும் என்று சாலமோன் கர்த்தரிடத்லே ஜெபிக்கிறார்.

கர்த்தருடைய வார்த்தையின் படி சாலமோன் பெர்சிலமேன் தேவாலையத்தை கட்டி முடித்து ஆண்டவருடைய நாமத்தையும் மகிமைப்படுத்துகின்றான்.  தாவீதின் நகரத்திலே இருந்து உடன்படிகை பெட்டியை புதிதாக கட்டிய அந்த மகிமை நிறைந்த தேவாலயத்திலே கொண்டு வந்து வைக்கிறான்.  அங்கே கேர்பின்களின் செட்டிகளின் கீழாக அந்த உடன்படிக்கை பெட்டி வைக்கப்படுகிறது.  ஜனங்கள் எல்லாரும் ஆரவாரித்து, மகிழ்ந்து, சந்தோஷப்படுகின்றார்கள்.

கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தையும் நிரப்பித்து சாலமோன் இஸ்ரவேல் ஜனங்களை ஆசிர்வதித்தான்.  அவர்களுக்காக ஜெபித்தான்.  அந்த வேளையிலே என் தகப்பனாகிய தாவீது என்னும் உன்னுடைய  தாசனை நோக்கி நீர் இவ்விதமாக சொன்னீரே! அந்த விண்ணப்பத்தின் படி என்னையும் என்னைத் தள்ளும் என் நாட்களிலும் என் குடும்பத்து மக்களுக்கும் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி இஸ்ரேலின் சிங்காசனத்திலே இருக்க அந்த பாக்கியத்தை என்மக்களுக்கும் தாரும் என்று சொல்லி விண்ணப்பிக்கின்றான்.

கர்த்தர் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார்.  கர்த்தருடைய வழிகளிலே நடக்கிறபொழுது அவருக்கு பிரியமான காரியங்களை நாம் நடத்துகிற பொழுது ஆண்டவர் தாம் சொன்ன வாக்குத்தத்தத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார்.  அவர் வாக்கு மாறாதவர்.  அவர் உண்மைகளுடைய தேவன்.  அவர் நீதி செய்வார்.  நாமும் இவ்விதமாக கர்த்தரை நோக்கி மன்றாடுவோம்.  நம்முடைய நாட்களிலே இருக்கிற பிரச்சனைகள் எல்லாவற்றையும்  ஆண்டவருடைய சமூகத்திலே சொல்லுகிறபொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.  கர்த்தாவே! நாங்கள் உம்மை ஸ்தோஸ்த்திக்கிறோம்.

நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை எங்களுடைய நாட்களிலும் எங்களுக்கும் எங்களுடைய சந்ததியினருக்கும் நன்மையாக மாற்றிகொடுப்பீராக. அந்த வாக்குத்தத்தங்களின் நன்மைகளெல்லாம் எங்களுடைய குடும்பத்து மக்களுக்கு  கிடைக்க நீர் அருள் பாராட்டுவீராக.  நீர் எங்களை போதித்து நடத்தும்.  சத்தியத்தின் வழியிலே நடத்தி எங்களைத் தாங்கும் பெரிய கிருபைகளை செய்யும்.  இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கு வேண்டிய நன்மைகளைக் கொடுத்து ஆசிர்வதிப்பீராக. ஏசு கிருஸ்த்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com